அஞ்சாப்பு அஞ்சுறேன் அப்பு - படித்ததில் பிடித்தது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2019

அஞ்சாப்பு அஞ்சுறேன் அப்பு - படித்ததில் பிடித்தது!


அரைக்கால் சட்டையோட பலப்பம் பலகை கையோட
அழுதுனே போனேன் நானும் ஸ்சுலுக்கு

புடிக்காத எடமாட்டம் அம்புட்டு பயம்
தாய்ப்பால் மறந்து தாய்மொழி கத்துக்க கொத்தா புடிச்சி என இங்க கொண்டாந்து சேத்தாங்க

என்னைய மாதிரியே அம்புட்டு பயலுவளும் அழுது பொறண்ட இடந்தான் அந்த ஒன்னாப்பு பள்ளிக்கூடம்

போக போக புடிச்சிப்போச்சி டீச்சரம்மா கத சொல்லி சிரிச்சி பேசி முட்டாயா இனிச்சிப்போச்சி ஒன்னாங்கிளாசு

முனியன் பால்பாண்டி கோமதி கவுசல்யானு சிநேகித பந்தம்
ஆடுபுலி ஆட்டந்தொடங்கி மண்வாசம் மாறாத இனிமை பள்ளியாச்சு எங்க பள்ளி

கூட்ட கழிக்க வகுக்க பெருக்கனு துளிர் விட்டுச்சு கணக்கு
வராத இங்கிலீசும் குட்மார்னிங் குட்ஈவ்னிங்குன்னு மனசுல வந்து நின்னுச்சு

பாய் நடுவால டீச்சரம்மா உக்காந்து அட்டபடம் காட்டி காட்டி அச்சத்த போக்குனாங்க

கிரேடு கொண்டாந்து பெயில மறக்க வச்சாங்க
என்னமோ ஏபிஎல்லு சிசிஇனு வகை வகையா படிச்சோம்

ரெண்டு பருவம் போன பெறவு குண்டு ஒன்ன போட்டாக்கா சிண்டு சிறுங்க மெரண்டு போவாதா?
என் பிரண்டு பாசாக பெயிலா நா போனாக்கா ஊர் ஒலகம் என்னைய ஏசாதா?

அஞ்சாவதுல பொதுத்தேர்வா?
பூக்காத மொட்ட கையவச்சு விரிச்சாக்கா அறிவு வாசம் தான் வருமா
கல்விப்புதுமை தான் ஒத்துக்கறோம் ஆனா எங்களுக்கு பொதுத்தேர்வு தகுமா?

ஐயா சாமிகளா
நாலும் அறிஞ்சவங்களா
ஏழைபாழைக படிக்கத்தான் பள்ளி
எங்க கனவுல வேண்டாமுங்க கொள்ளி
தயவு செஞ்சு உங்க முடிவ வைய்யுங்கைய்யா கொஞ்சம் தள்ளி

அஞ்சாவதோட நின்னான்னு வரலாறு வேணாம்
எங்க சிறகும் வானம் அளக்க வேணும்

கொள்கை முடிவுனு சொல்லிட்டீங்க
இந்த குட்டிப்பய மனபயத்தையும் கொஞ்சம் யோசிங்க

இப்படிக்கு,
அஞ்சாங்கிளாசு
அறிவழகன்

7 comments:

  1. கண்கள் குளமாயின.


    ReplyDelete
  2. அருமை என் நினைவு சற்று பின் நோக்கி

    ReplyDelete
  3. Kavidhaila nailaruku all pass 8 th Vara nu soili Ava 9 th la vandhu onnum theriyama naluvarusama fail aguvaney adhuku yena panalam oru knowledge illama yepadi Ava society la valamudiyum padika kastapadara pasaga one year extra padikaradhula thapilaye fail ana ne ye thitra knowledge matudhana mukiyam peruku pass agaradhum knowledge oda pass agaradhukum different irukey.

    ReplyDelete
  4. 8th Vara all pass adhu verum car bike licence vaga matudha use agudhu

    ReplyDelete
  5. inga engineering doctor degree padichavanellam arivoda than irukkana? Entrance exam pass pannittu evvlo per summa irukkan...educationkkum knowledgekkum different irukku....8th varaikkum ellorum pass aaganum...5th padikkira pasangalukku enna therium, avanga exam vachu enna scientist problem ah solve panna porangala...every child has a unique identity and skills.. ithu puriyama 5th 8th kku common exam ah?......already entrance exam na, entha parentsum v2la pasangala free ah irukka vidurathu illla... ippa antha kodumaiya intha 5th 8th std pasangalukkum kodunga...avangalum paithiyam maathiri ellathiyum maranthuttu irukkattum

    ReplyDelete
    Replies
    1. முட்டாள் ஆட்டு மந்தை பெற்றோருக்கு நாம் ஒன்னும் செய்ய முடியாது.... அரசு பள்ளியில் அல்லது ஒரு சிறிய தனியார் பள்ளியில் கல்வி குடுப்பதை விட தொழிற்சாலை போன்ற பள்ளிக்கு அனுப்பி என்ன சாதிக்க போகிறார்கள்,

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி