வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2019

வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு!


வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரெப்போ வட்டி விகிதம் என்பது மத்திய வங்கியால் வணிக வங்கிகளுக்குப் பணம் தேவைப்படும் போது கடன் அளிக்கக் கூடிய வட்டி விகிதம் ஆகும். மக்களுக்குப் பணம் தேவைப்படும் போது வங்கிகளிடம் கடன் பெறுவது போன்று , வங்கிகளுக்குக் கடன் தேவைப்படும் போது மத்திய வங்கியை அணுகுவார்கள். அது மட்டும் இல்லாமல் மத்திய வங்கிக்குக் கடன் தேவைப்பட்டாலும் சில வணிக வங்கிகள் கடன் அளிக்கும். இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்று அழைக்கப்படும்.

6வது நாணய கொள்கை கூட்டம் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டன.  நடப்பு நிதி ஆண்டில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் என இரண்டு முறை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Fraud advertisement, don't go for it! cheating person!! Be careful!!!

    ReplyDelete
  2. கல்வி செய்திக்கும் இதற்கும் என்ன சம்மந்தம் ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி