புதுமை பள்ளி விருது விண்ணப்பிக்க அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2019

புதுமை பள்ளி விருது விண்ணப்பிக்க அழைப்பு


'புதுமை பள்ளி' விருதுடன், 1 லட்சம் ரூபாய் பரிசு பெற, அரசு பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி, புதுமையான கற்பித்தல் முறையை கையாண்டு, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திய அரசு பள்ளிகளுக்கு, ஆண்டுதோறும், 'புதுமை பள்ளி' விருது வழங்கப்படுகிறது.

மாவட்ட அளவில், ஒரு துவக்கப் பள்ளி, ஒரு நடுநிலை மற்றும் ஒரு மேல்நிலை பள்ளி தேர்வு செய்யப்பட்டு, அதில் இருந்து ஒரு பள்ளி, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படும். வெற்றி பெறும் பள்ளிக்கு, விருதுடன், பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.

இதன்படி, மாவட்ட அளவிலான பள்ளிகளை தேர்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மூத்த தலைமையாசிரியர் மற்றும் கல்வியாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 'தகுதியுள்ள பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்' என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி