Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஐகோர்ட் தீர்ப்பை பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அமுல் செய்க

சமவேலை சமஊதியம் என்ற நீதிமன்ற உத்தரவை கல்வித்துறை தற்காலிக, ஒப்பந்த வேலையில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த கோரிக்கை.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அதே பணியை செய்யும் நிரந்தர ஊழியர்களைப்போல சம்பளம் நிர்ணயம் செய்ய நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் தலைமையிலான மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை பிப்ரவரி 22க்குள் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை மட்டும் இல்லாமல், பள்ளிக்கல்விதுறையிலும் தற்காலிக ஒப்பந்த முறையில் ஜெயலலிதா ஆட்சியில் 2012ல் 16ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். இவர்களில் தற்போது 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களே பணிசெய்து வருகின்றனர்.
உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் பாடங்களில் சிறப்பாசிரியர்கள் நிரந்தர ஊதியத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வருகின்றனர். கணினி அறிவியல், தோட்டக்கலை பாடங்களில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் நிரந்தர ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆனால் இதே பாடப்பிரிவுகளை சேர்ந்தவர்கள், பள்ளிக்கல்வி அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 8 கல்வி ஆண்டுகளாக அரசின் எந்தவித பணப்பலன்களையும் பெறமுடியாமல் ரூ.7ஆயிரத்து எழுநூறு மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஒருமுறைகூட போனஸ் கொடுத்ததில்லை. வருடாந்திர 10% ஊதியஉயர்வும் சரிவர கொடுக்கவில்லை.
P.F., E.S.I., கிடையாது. பணியில் சேர்ந்து பின்னர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு நிதி எதுவும் வழங்கவில்லை.
மகளிருக்கு மகப்பேறு விடுப்பு எதுவும் கிடையாது,  இதர விடுப்பு சலுகைகள் எதுவும் இல்லை.
பள்ளி முழுஆண்டு தேர்வி கோடைகால விடுமுறையான மே மாதத்திற்கு  சம்பளம் தருவதுமில்லை.
எனவே தற்போது ஐகோர்ட் தீர்ப்பினை பள்ளிக்கல்வித்துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட வேலையில் ஒப்பந்த முறையில் தற்காலிக பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கும் அமுல்செய்ய வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
இவண்
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல்  : 9487257203

3 comments

 1. February 3, 2019 at 11:38 AM
  இப்ப இவர்களின் கோரிக்கைக்கு பதில் என்ன? பாவம் இல்லையா தற்காலிக ஆசிரியருக்கு 10 ஆயிரம் 8 ஆண்டு பணி புரிபவருக்கு 7700 என்னங்கடா உங்க சட்டம் ஞாயம்? பொங்குன பங்காளிகளே பதில் என்ன? UGC வரையரை செய்த 50000 ரூபாய்க்கு இன்று வரை 15000 ஆயிரம் மட்டும் தான் அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கொளரவ விரிவுரையாளருக்கு இது உழைப்பு சுரண்டல் இல்லையா பெங்குன போராளிகளே? அனைத்து சங்கங்களும் நிரந்தர பணியாளர்களை நியமித்து தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஒழிக்க வேண்டும் என போராடுகிறது Go 56 படியுங்கள் உங்களுக்கு புரியும், மீசை வச்ச போலி இராணுவ போராளிகளே, அரசு வேலைக்கு 10000 மட்டும் போதும் என்றால் எந்த ஏழை தாய் தந்தை இனி படிக்க வைப்பான் அதை விட வருமானம் ஆடு மேய்ப்பதில் வருமே என நினைக்க மாட்டானா? வேலை இல்லா திண்டாட்டத்திற்கு யார் காரணம் அரசின் தவறான கொள்கை முடிவு 620 க்கு மேற்பட்ட பி.எட் கல்லூரியை திறந்து விட்டு, கல்லூரிக்கு செல்லாமலே பட்டம் வாங்க அனுமதித்து விட்டு எதுவும் தெரியாது போல் அரசு இருந்து விட்டு, ஏகப்பட்ட தனியார் பள்ளியை அனுமதிக்க விட்டு 9, 11 ஆம் வகுப்பு நடத்தாமலே பொது தேர்வு எழுத விட்டு பின்பு ஆசிரியரின் பிள்ளையை மட்டும் அரசு பள்ளியிலே சேர்க்க வேண்டும் என கூவுவது என்னங்கடா உங்க ஞாயம், எந்த தனியார் பள்ளி , கல்லூரி முறைகேட்டில் ஈடுபட்டது என்று அங்கீகாரத்தை ரத்து செய்ததுண்டா? எல்லாம் அரசியல்டா? அதற்கு நாங்கள் முதல் பலி, நீங்கள் இரண்டாம் பலி, இந்த நாடும் நாட்டு மக்களும்........

  ReplyDelete
 2. இந்த அரசு இருக்கும் வரை நமக்கு ?

  ReplyDelete
 3. அடப்பாவிங்களா நாங்க என்ன பாவம் டா பண்ணனும் தமிழ்நாட்டு பிறந்ததுதான் பாவம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives