JACTTO GEO - ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை நீக்குவது குறித்து அரசு பரிசீலனை - சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2019

JACTTO GEO - ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை நீக்குவது குறித்து அரசு பரிசீலனை - சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு.


தமிழக அரசு சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இன்றிலிருந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.

இன்று, ஜாக்டோ-ஜியோ தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. ’அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்’ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்’ என கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசினார்.ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று தி.மு.க சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.தமிழக அரசு சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இன்றிலிருந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. இன்று, ஜாக்டோ-ஜியோ தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. ’அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்து, அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போராட்டக் காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்’ என கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்துதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசினார்.

இதையடுத்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “பொதுத்தேர்வு நெருங்கும் நேரம் என்பதால் நிர்வாக ரீதியாக வேறு வழி இல்லாமல் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. போராட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலைமறியலில் ஈடுப்பட்டதால் அவர்கள் மீது 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைநீக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்” எனக் கூறினார்.

6 comments:

  1. அட பரிசீலனைக்குப் புறந்தவனே......




    எல்லாமே பரிசீலனையில் தான் உள்ளது... செயல்பாடே கிடையாது..

    ReplyDelete
  2. Nagalum election la parisilikarom

    ReplyDelete









  3. FLASH NEWS . ... . .. .. .. இந்த ஆட்சியை அகற்றுவதை குறித்து மக்கள்,தீவிரமாக பரிசீலனை. மிக விரைவில் முடிவு கட்டபடும்.

    ReplyDelete
  4. தைரியம் இருந்தால்......21 தொகுதிக்கும்,உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்துங்கள்.......மக்கள் உங்களை பரிசீலிக்க காத்திருக்கிறார்கள்......

    ReplyDelete
  5. உண்ட வீட்டுக்கே துரோகம் செஞ்ச நீ முதலமைச்சர்?இந்த பதவிக்கு நீ சசிகலா காலில் விழுந்த வீடியோவை ஒவ்வொரு ஆசிரியர்களும் வைத்துள்ளோம்.மறந்து விடாதே.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி