Science Fact - உணர்வகற்றும் மருந்து (anesthesia) நோயாளியின் நனவுநிலையை எவ்வாறு நீக்குகிறது ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2019

Science Fact - உணர்வகற்றும் மருந்து (anesthesia) நோயாளியின் நனவுநிலையை எவ்வாறு நீக்குகிறது ?



உணர்வகற்றும் மருந்தின் வாயிலாக நோயாளிக்கு உண்டாகும் மயக்க நிலை ஆழ்ந்த உறக்கத்திற்கு இணையானதுஎனலாம். நம்மை நனவு நிலையில் வைத்திருப்பதற்குக் காரணமான சிறப்பு உயிரணுத் தொகுதிகள் நமது மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன.

இது நுண்வலைப்படிவ அமைப்பு (reticular formation) எனக் கூறப்படுகிறது. மூளையின் பிற பகுதிகளுடன் இவ்வமைப்பு கொண்டிருக்கும் தொடர்பைப் பொறுத்தே நமது நனவு நிலை அமைகிறது. வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி சோடியம், பொட்டாசியம் அயனிகளைப் (ions) பரிமாறிக் கொள்வதின் வாயிலாக உண்டாகும் சிறு அளவிலான மின் உற்பத்தியின் காரணமாக மேற்கூறிய உயிரணுக்கள் பிற பகுதிகளுடன் தொடர்பு கொள்ள இயலுகிறது. உணர்வகற்றும் மருந்தானது மூளையின் உயிரணுப் பரப்பில் மேற்கூறிய வேதி வினையையும் மின் தொடர்பையும் தடை செய்கிறது; இதன் காரணமாகவே நனவு நிலை நீங்கி மயக்க நிலை உண்டாகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி