Science Fact - மரத்தாலான பொருட்களைத் தொட்டால் கதகதப்பாகவும், உலோகப் பொருட்களைத் தொட்டால் சில்லென்றிருப்பதும் ஏன் ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2019

Science Fact - மரத்தாலான பொருட்களைத் தொட்டால் கதகதப்பாகவும், உலோகப் பொருட்களைத் தொட்டால் சில்லென்றிருப்பதும் ஏன் ?



ஒரு பொருளைத் தொட்டால் அது கதகதப்பாக இருப்பதும், சில்லென்றிருப்பதும், நம் உடலிலுள்ள தோல் பரப்பின் வெப்பம் அப்பொருளில் பரவுகிறதா இல்லையா என்பதைப் பொறுத்ததாகும்.

நமது தோலிலிருந்து வெப்பம் வெளியேறுகையில், தோலின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் வெப்ப உணர்வு நரம்பிலுள்ள உயிர் அணுக்களுக்கு சில்லென்ற உணர்வு தோன்றுகிறது. உலோகம் மிகவும் சிறந்ததொரு வெப்பக் கடத்தியாகும். எனவே அதனைத் தொடும்போது கையிலுள்ள வெப்பம் வெளியே கடத்தப்பெற்று நமக்குச் சில்லென்ற உணர்வு தோன்றுகிறது.

குளிர் காலத்தில் நமது சுற்றுச்ச்சூழலின் வெப்ப அளவு நமது உடலின் வெப்ப அளவைவிடக் குறைவாக இருக்கும். அப்போது உலோகத்தாலான பொருட்களைத் தொட்டால் மிகவும் சில்லென்ற உணர்வு உண்டாகிறது. ஆனால் மரத்தாலான பொருட்கள் அரிதில் வெப்பக் கடத்திகள்; உலோகங்களைப் போன்று வெப்பத்தை அவ்வளவாகக் கடத்துவதில்லை; எனவேதான் மரப் பொருட்களைத் தொட்டால் கைத்தோலின் வெப்பம் வெளியேறாமல் கதகதப்பான உணர்வு ஏற்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி