Science Fact - பிளாஸ்டிக்கினாலான வாளி, குவளை போன்ற பொருட்கள் நீண்ட பயன்பாட்டிற்குப் பின்னர் நொறுங்கி உடைந்து போவது ஏன் ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2019

Science Fact - பிளாஸ்டிக்கினாலான வாளி, குவளை போன்ற பொருட்கள் நீண்ட பயன்பாட்டிற்குப் பின்னர் நொறுங்கி உடைந்து போவது ஏன் ?



பிளாஸ்டிக்கில் நொறுங்கும் தன்மை (brittleness) இரண்டு காரணங்களால் உண்டாகிறது. அன்றாடம் புழக்கத்திலுள்ள வாளி, தொட்டி, குடுவை ஆகியன பாலிவினைல் குளோரைடு (PVC) என்ற பொருளால் ஆனவை.

இது மிகவும் கெட்டியானது, விறைப்பானது, எளிதில் அச்சுருவாக்கம் செய்ய முடியாதது. தேவையான உருவத்தில்அச்சுவார்ப்பு (mould) செய்யும் பொருட்டு இதனுடன் மென்மையூட்டும் (plasticizer) பொருள் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு சேர்க்கப்பட்டு அச்சு வார்க்கப்பட்ட பொருட்கள் சொரசொரப்பற்று, நயமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கும். இப்பிளாஸ்டிக் பொருட்களைத் தொடர்ந்து பயன் படுத்துவதாலும், வெந்நீர் மற்றும் சலவைத் தூள் ஆகியவற்றின் தொடர்பினாலும், வெப்பம், சூரிய ஒளி ஆகியவற்றாலும் அவற்றிலுள்ள மென்மையூட்டியானது இழக்கப்படுகிறது. இதனால் நெகிழ்ச்சித்தன்மை அற்றுப்போய் பிளாஸ்டிக் பொருள் நொறுங்கி உடையத் துவங்குகிறது.

இஃது ஒரு காரணம். மற்றொரு காரணம் என்னவெனில் புற ஊதாக் கதிர்வீச்சு (ultra violet radiation) அல்லது மிகு வேதி வினையுள்ள ஒசோன் (ozone) என்ற நீல நிற வளியின் தொடர்பு ஆகியவற்றால் பிளாஸ்டிக் பொருளில் தோன்றும் கட்டவிழ்ப் படிக மூலிகள் (free radicals) ஆகும். இவற்றாலும் பிளாஸ்டிக் பொருட்கள் நொறுங்கவும் உடைந்து போகவும் கூடும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி