TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு, போட்டி தேர்வு - TRB நேற்று வெளியிட்ட அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2019

TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு, போட்டி தேர்வு - TRB நேற்று வெளியிட்ட அறிவிப்பு!


தமிழக பள்ளி கல்வி துறையில், ஆசிரியர் பணிக்கு, முதன்முதலாக, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 128 காலியிடங்களுக்கு, இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர் பதவிக்கு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், ஏற்கனவே, பணி நியமனம் மேற்கொள்ளப்பட்டது. 2009ல், மத்திய அரசின், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்தது.

இந்த சட்டத்தை பின்பற்றி, ஆசிரியர் நியமனத்துக்கு, தகுதி தேர்வு நடத்த வேண்டும் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டது.இதை தொடர்ந்து, 2011 முதல், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு, அதில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, பணி நியமனம் வழங்கப்பட்டது. அதிலும் சர்ச்சை எழவே, 'தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், ஆசிரியர் பணியில் சேர, போட்டி தேர்வு நடத்தப்படும்' என, 2018 ஜூலையில், தமிழக அரசு அறிவித்தது.அதன்பின், புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட வில்லை. அதனால், போட்டி தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக் கான ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதை அமல்படுத்தும் வகையில், 128 ஆசிரியர் பணியிடங்களுக்கு, முதல் முறையாக, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்க பள்ளிகளில், பழங்குடியினத்தவருக்கான, 12 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

'டெட்' தேர்ச்சி பெற்றவர் களுக்கு, போட்டி தேர்வு நடத்தி, அதன் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் நடைபெறும். போட்டி தேர்வுக்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை, 'ஆன் லைனில்' பதிவு செய்ய வேண்டும்.தேர்வு குறித்த அறிவிப்புகள், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், விரைவில் வெளியிடப்படும். இதில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, 36 ஆயிரம் முதல், 1.05 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

சிறப்பாசிரியர் நியமனம்

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பழங்குடியினர் பிரிவில், 17 சிறப்பாசிரியர்கள்; கள்ளர் சீர்திருத்த பள்ளிகளில், பட்டியல் இனத்தவருக்கான, நான்கு முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், நான்கு உதவி பேராசிரியர்கள் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பையும், டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

38 comments:

  1. TRB UG/PG CHEMISTRY PREVIOUS YEAR ORIGINAL QUESTION PAPER AVAILABLE FROM 2001 - 2017 AND MATERIAL ALSO AVAILABLE
    CONTACT .9884678645

    ReplyDelete
  2. 2017 re exam elutanuma sollunga

    ReplyDelete
  3. All tet pass candidate apply pannalam

    ReplyDelete
  4. TET 1 PAPER pass apply pannalama

    ReplyDelete
  5. Paper 1 ku sca candidate apply pannalama frd

    ReplyDelete
  6. All tet passed candidates eligible or only SC and St?

    ReplyDelete
  7. Nan 2013&2017 tet paper1 pass panni iruken nan apply pannalama

    ReplyDelete
  8. yes, but you community should be SC/SCA/ST only.

    ReplyDelete
  9. Paper 1 ku sca candidate apply pannalama

    ReplyDelete
  10. Na 2013,2017 tet paper 1 pass SC apply pannalama friends

    ReplyDelete
  11. Pls yaravathu therinja sollunga friends. ..

    ReplyDelete
  12. Syllabus?aduththa matham ivanga iruppangala? Nice comedy...

    ReplyDelete
  13. அப்போது பணி மூப்பில் ஆசிரியர் நியமனம்.
    இப்போது பண மூப்பில் ஆசிரியர் நியமனம். இப்படிக்கு தமிழ்நாடு அரசு.

    ReplyDelete
  14. அப்போது பணி மூப்பில் ஆசிரியர் நியமனம்.
    இப்போது பண மூப்பில் ஆசிரியர் நியமனம். இப்படிக்கு தமிழ்நாடு அரசு.

    ReplyDelete
  15. ஆசிரியர் பணிக்கு ஏல அறிவிப்பு:இடம்:ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை.5லட்சம் முதல் 15லட்சம் வரை.

    ReplyDelete
  16. ஓடுங்க!ஓடுங்க!வேகமா.....

    ReplyDelete
  17. I'm tet passed.but MBC.can I apply for this exam.please tell me friends

    ReplyDelete
  18. உயர் நீதி மன்றமே, உச்ச நீதி ன்றமே இந்த அநியாயத்த கேட்க மாட்டீங்களா!?

    ReplyDelete
  19. இது திள்ளு முள்ளு நடக்கிறது Paper 1பதிவுமூப்புன்னு சொல்லிவிட்டு தினம் ஒரு பேச்சு இது என்ன அரசு

    ReplyDelete
  20. இந்த போட்டி தேர்விற்கான Syllabus பற்றி தெரிந்தால் கூறவும்
    நண்பர்களே....

    ReplyDelete
  21. government does not know the syllabus

    ReplyDelete
  22. போட்டித் தேர்வில்
    அனைத்து பாடப் பிரிவினருக்கும்
    பொதுவாக வினாக்கள் கேட்கப்படுமா?
    அல்லது அவரவர் பாடப்பிரிவில்
    கேட்கப்படுமா?


    தெரிந்தவர் பதிவிடவும்.

    ReplyDelete
  23. இந்த காலிப்பணியிடம் 2013க்கு உரியது. அப்போது வழக்கு பதிவு... இப்போது தீர்ப்பு...
    ஆகவே 2013 தேர்வர்கள் மட்டுமே போட்டி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்..
    இல்லையேல் மீண்டும் ஒரு வழக்கு தாக்கல் செய்ய முடியும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு நடந்த தேர்வை மட்டும் தான் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும்.
    பிந்தைய தேர்வுகள் பொருந்தாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி