TNPSC - இளநிலை வரைவு அலுவலர், உதவி இன்ஜினீயர் பணிகளுக்கான 4 போட்டி தேர்வுகளுக்கு இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2019

TNPSC - இளநிலை வரைவு அலுவலர், உதவி இன்ஜினீயர் பணிகளுக்கான 4 போட்டி தேர்வுகளுக்கு இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு!



நெடுஞ்சாலைத் துறை இளநிலை வரைவு அலுவலர், உதவி இன்ஜினீ யர் உட்பட 4 டிஎன்பிஎஸ்சி தேர்வு களுக்கான அறிவிப்புகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளன.

2019-ம் ஆண்டு என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்ற விவரங்கள் அடங்கியவருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளி யிட்டது. இதைத்தொடர்ந்து, காலியிடங் கள் இருப்பதாக கருதப்படும் தொழிலாளர் நல உதவி ஆணையர், ஜெயிலர், சுற்றுலா அலுவலர் உள் ளிட்ட பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர் பார்த்து வருகிறார்கள்.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமாரிடம் கேட்டபோது, “வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகளுக்கு உரிய காலத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும். தேர்வு முடிவுகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளியிடப்படும்” என்றார்.

 அந்த வகையில், தமிழ்நாடு மீன்வளத்துறை ஆய்வக உதவியாளர் தேர்வு, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை உதவி பயிற்சி அலுவலர் தேர்வு, நெடுஞ்சாலைத்துறை உதவி வரைவு அலுவலர் தேர்வு, உதவி இன்ஜினீயர் பணிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு ஆகியவற்றுக்கான அறிவிப்புகள் இந்த மாதம் வெளியிடப்பட உள்ளன. கலந்தாய்வு தொடக்கம் இதற்கிடையே, குரூப்-4 தேர்வின்கீழ் வரும் சுருக் கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) பணிக்கான சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் கலந்தாய்வுடிஎன் பிஎஸ்சி அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. விண்ணப்பதாரர் களின் கல்விச் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு பின்னர் அவர்கள் கலந்தாய்வுக்கு அனுப்பப்பட்ட னர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட படி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நாளை (வெள்ளிக் கிழமை) நிறைவடைகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி