TRB - விரிவுரையாளர் தேர்வு முறைகேடு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2019

TRB - விரிவுரையாளர் தேர்வு முறைகேடு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!


கடந்த 2017ல் நடந்த அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வுக்கு முன், முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து வரும் 20ம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்யும்படி, முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப் பிரிவு புலன் விசாரணை அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கடந்த 2017ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு பாலிடெக்னிக்களில் ஆயிரத்து 58 விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.

இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து, தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அரசின் முடிவால் நேர்மையாக தேர்வு எழுதிய மாணவர்களும் பாதிக்கப்படுவர் என்பதால், தேர்வை ரத்து செய்யக் கூடாது என அரசுக்கு உத்தரவிடக் கோரியும், மோசடியில் ஈடுபட்டவர்களை தனியாக பிரித்து அவர்களின் தேர்வை மட்டும் ரத்து செய்யக்கோரியும் விண்ணப்பதாரர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

 தனியார் நிறுவனம் மூலம் தேர்வு நடத்தப்பட்டதாகவும், அந்த நிறுவனம் விடைத்தாள்களில் திருத்தம் செய்துள்ளதாகவும், பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறி, அரசின் உத்தரவை உறுதி செய்து, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து விண்ணப்பதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, கடந்த 2017ல் நடந்த இந்த மோசடி வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப் பிரிவு புலன் விசாரணை அதிகாரியை வரும் 20ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதுவரை நடந்த விசாரணையில், விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வுக்கு முன்பே முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

2 comments:

  1. Seekiram ethaavathu Oru judgement kuduthu....case a mudinga paa

    ReplyDelete
  2. கல்விச்செய்தி, இந்த செய்தியை அப்படியே ஒரு நாளிதழிலிருந்து சுட்டு போட்டிருக்கிறீர்கள் என்பது அறந்ததே.. இருப்பினும், இந்த இதழிலிருந்து நாங்கள் செய்தியை எடுத்தோம் என்கிற credits கொடுப்பது தான் அறம். பின்பற்றத் தவற வேண்டாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி