செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் 1000 பள்ளி மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2019

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் 1000 பள்ளி மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு தொடக்கம்



அஞ்சல் துறை சார்பில், பள்ளி மாணவிகள் 1,000 பேருக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணக்குத் தொடங்கப்பட்டது.

சென்னை நகர மத்திய கோட்ட அஞ்சல் துறை சார்பில், பள்ளி மாணவிகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், அஞ்சலக சேமிப்புக் கணக்குத் தொடங்கும் முகாம், தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் நடைபெற்றது.

விழாவுக்கு சென்னை நகர மத்திய கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலோக் ஓஜா தலைமை வகித்தார்.தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்த்தன், தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் பி.சத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில், ஜெயவர்த்தன் தனது சொந்தப் பணத்தில் இருந்துபள்ளி மாணவிகள் 1,000 பேருக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கிக் கொடுத்தார்.

விழாவில் பேசிய அலோக் ஓஜா, “ஜெயவர்த்தன் தனது சொந்தப் பணத்தில் இருந்து பள்ளி மாணவிகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணக்குத் தொடங்கிக் கொடுத்ததற்கு நன்றி. செல்வமகள் சேமிப்புத் திட்டம் தங்களது பெண் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தங்களுடைய குழந்தையின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கு பெற்றோர்கள் ஆற்றும் பங்களிப்பு பாராட்டுக்குரியது” என்றார்.விழாவில், தி.நகர் தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அலுவலர் ஜி.கே.பொன்னுரங்கம், பள்ளி தலைமையாசிரியை மல்லிகா மந்திரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி