ஆங்கிலம் முதல்தாள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2019

ஆங்கிலம் முதல்தாள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி


'10 ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததால், அதிக மதிப்பெண் பெறலாம்', என, திண்டுக்கல் மாணவர்கள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:

கேள்விகள் எளிமைஎஸ்.திருநாவுக்கரசு, டட்லி மேல்நிலை பள்ளி, திண்டுக்கல்: புத்தகத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டு இருந்ததால் எளிமையாக இருந்தது. சிலகேள்விகளுக்கு யோசித்து பதில் எழுதும்படி இருந்தது.

ஒரு மதிப்பெண் கேள்விகள் மிகவும் எளிது. நன்றாக படிக்கும் மாணவர்கள் 95 மதிப்பெண்வரை பெறலாம்.சிந்திக்க வைத்ததுஎம்.லாவண்யா, ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, திண்டுக்கல்: ஆங்கிலம் முதல் தாள் மிக மிக எளிதாக இருந்தது. வராது என நினைத்த கேள்விகளெல்லாம் கேட்கப்பட்டிருந்தது. ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்கள் சுலபமாக இருந்தது. படம் பார்த்து விடை எழுதும் பகுதி மட்டும் சிந்திக்கும்படி இருந்தது.மதிப்பெண் அள்ளலாம்ஜே.கீர்த்தனா, புனித வளனார் மகளிர் மேல்நிலை பள்ளி, திண்டுக்கல்: எதிர்பார்த்த மாதிரி புத்தகத்தின் பின்பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இலக்கணம், ஒரு மதிப்பெண் வினாக்கள் புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டிருந்தது. ஆனால் யோசித்து எழுதும்படி இருந்தது. கேள்வி பதில், கட்டுரை, மனப்பாட பகுதி மிகவும் எளிமையாக இருந்தது.

புத்தகம் முழுவதையும் நன்றாக படித்திருந்தால் மதிப்பெண் அள்ளலாம்.ஆங்கிலம் எளிமைஜே.செல்வராஜ் வேளாங்கண்ணி, ஆங்கில ஆசிரியர், ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, திண்டுக்கல்: வகுப்பில் நடத்திய பாடங்களை புரிந்து படித்தவர்களுக்கு ஆங்கிலம் முதல் தாள் எளிமை தான். மாணவர்கள் யோசித்து எழுதும்படி கேள்விகள் கேட்கப்பட்டன. ஒன்று, இரண்டு மதிப்பெண், மனப்பாட பகுதி சுலபமாக இருந்தது. முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. எதிர்பாராத கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. நன்றாக படிக்கும் மாணவர்கள் நிச்சயம் 99 மதிப்பெண் பெறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி