12 லட்சம் ஓட்டுகள் என்னாகும்? ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், அ.தி.மு.க., அரசு மீது கடும் கோபம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2019

12 லட்சம் ஓட்டுகள் என்னாகும்? ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், அ.தி.மு.க., அரசு மீது கடும் கோபம்


'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதால், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், அ.தி.மு.க., அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். அப்போதே, 'தேர்தலில் எங்கள் வலிமையை காட்டுவோம்' என, வெளிப்படையாக எச்சரித்தனர்.

ஆனாலும், இவர்களின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில், முதன் முதலாக, பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்களை தேர்தல் பணிக்கு களம் இறக்குவது உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை, அ.தி.மு.க., அரசு எடுத்தது.அதேநேரம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தரப்பில், 12 லட்சம் ஓட்டுகளையும், சிந்தாமல், சிதறாமல் அள்ள வேண்டும் என, தற்போது மறைமுக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.'அரசு என்ன வியூகம் வகுத்தாலும், இ.டி.சி., - எலக் ஷன் டூட்டி சர்ட்டிபிகேட் - என்ற தேர்தல் பணி சான்றை வாங்க மறவாதீர்கள். அதில் தான் சூட்சுமம் உள்ளது' என, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர், அரசு ஊழியர்கள்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:

எப்படியும், 99 சதவீதம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அதே லோக்சபா தொகுதியில் தான் பணிபுரிய வேண்டி வரும். அதேநேரம், இது லோக்சபா தேர்தல் என்பதால், தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிக்குள் தான் பணிபுரிய வேண்டியிருக்கும். எனவே, இ.டி.சி.,யை மறக்காமல், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலரிடம் பெற்று சென்று விடுங்கள். அச்சான்று மூலம், நீங்கள் பணியாற்றும் மையத்திலேயே, உங்கள் ஓட்டை அளிக்கலாம். எனவே, வாக்காளர் வரிசை எண், ஓட்டு மைய விபரத்தை தெரிந்து வைத்து, இ.டி.சி.,யை பெற்று, பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் பணிபுரியும் மையத்தில், ஓட்டளித்து, இ.டி.சி., மூலம் ஓட்டளித்தவர் விபரத்தையும், ஓட்டு கணக்கு விபர படிவத்தில், மொத்த ஓட்டுகள் எண்ணிக்கை விபரத்தையும் குறிப்பிட்டு விடுங்கள் என, அறிவுறுத்தி வருகிறோம். இதன்மூலம், 2 லட்சம் ஆசிரியர்கள், 10 லட்சம் அரசு ஊழியர்களின் ஓட்டுகளில் ஒன்றைக் கூட வீணாக்கக் கூடாது என, சபதம் எடுத்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

7 comments:

  1. 10000 roopai sambalathil thargaliga teachers niyamanam endra aasai katti ----- 😢😢.
    Ethuvarai tet pass panni velai kidaikumal irukuravanga ellorum
    Kaandaththan irukkaanga.😐

    ReplyDelete
  2. விவசாயம் செய்பவர்கள் உங்கள் விருப்பம் போல் உங்களுக்கு நல்லது செய்பவர்கள் யார் என்று தெரிந்து கொண்டு வாக்களியுங்கள்.

    ReplyDelete
  3. ஆசிரியர்கள் ஓட்டு என்ன ஆகும்?
    மீத்தேன் போராட்ட விவசாயிகள் ஓட்டு என்ன ஆகும்?
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஓட்டு என்ன ஆகும்?
    டெட்,சிறப்பாசிரியர்,பாலிடெக் தேர்வால் அலைக்கழிக்கப்பட்ட நம் ஓட்டு என்ன ஆகும்?
    எட்டு வழிச்சாலை ஓட்டு என்ன ஆகும்?
    நீட் தேர்வு ஓட்டு என்ன ஆகும்?

    ReplyDelete
    Replies
    1. என்னவாகும் என்பதை தேர்தலில் அனைவரும் சொல்வார்கள்

      Delete
  4. ஒட்டு மொத்த ஆப்பாகும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி