பிளஸ் 1 ஆங்கிலத் தேர்வு சற்று கடினமாக இருந்தது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2019

பிளஸ் 1 ஆங்கிலத் தேர்வு சற்று கடினமாக இருந்தது


பிளஸ் 1 ஆங்கிலத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கணிதம் உட்பட முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 12-ம் தேதி தொடங்குகிறது.

தமிழக பள்ளிக்கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கியது. முதல்நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வு எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும்உள்ள 2,914 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 659 பேர் எழுதினர்.

இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், புதியமுறைப்படி 90 மதிப்பெண்களுக்கு ஆங்கிலம் தேர்வுநடத்தப்படுவதால் அதிக எதிர்பார்ப்புஇருந்தது. இந்நிலையில் ஆங்கில வினாத்தாளில்பெரும்பாலான கேள்விகள் எளிதாக இருந்தன.ஒன்று மற்றும் 5 மதிப்பெண் பகுதியில் மட்டும் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டன. இலக்கணம் சார்ந்த கேள்விகளும் கடினமாக இருந்தது என மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கணிதம், விலங்கியல் போன்ற முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 12-ம் தேதி தொடங்குகிறது. ஒட்டுமொத்தமாக பிளஸ் 1 தேர்வு மார்ச் 22-ம் தேதி முடியவுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி