Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

+2 புதிய பாட நூல்களை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடும் முன்னரே Whatsapp ல் இ-புக்ஸாக வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி!


பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், புதிய பாட நூல்களை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடும் முன்னரே அவை இ-புக்ஸாக வெளியாகிஉள்ளது.

இது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டமானது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அந்தந்த பாடங்கள் சார்ந்த நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. பிளஸ் 1 வகுப்புக்கு கடந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக புதிய நூல்கள் வெளியிடப்பட்டன.வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இவை அச்சிடப்பட்டு மே மாதத்தில் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். இ-புக்ஸ்களாக tnscert.org இணையதளத்திலும் வெளியிடப்படும். தற்போது வரை, பிளஸ் 2 வகுப்புக்கான புதிய பாட நூல்கள் வெளியிடப்படவில்லை.ஆனால், புதிய பாடத்தில் உருவாக்கப்பட்டுள்ளபாட நூல்கள் இ-புக்ஸ்களாக ரகசியமாக சில தனியார் பள்ளிகளுக்கு பகிரப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ஆங்கில வழிக் கல்விக்கான பாட நூல்களே இ-புக்ஸ்களாகவெளிவந்துள்ளன.அதில், இயற்பியல், கணினி அறிவியல், கணிதம், உயிரி தாவரவியல், உயிரி- விலங்கியல் என உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடங்களின் முதல் தொகுதி வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் எஸ்எஸ்எல்சி வகுப்புக்கான பாடங்களும் இ-புக்ஸில் வெளிவந்துள்ளன. ஒருபடி மேலாக, சில பள்ளிகள், புதிய பாடத்திட்டத்தில் வெளியான பாடங்களுக்கு வழிகாட்டி நூல்களையும் வெளியிட்டுள்ளன.புதிய பாட நூல்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்னரே, அவை வெளியாகி இருப்பது, கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது:

பள்ளி மாணவர்கள் உயர்கல்வி செல்ல பிளஸ் 2 வகுப்பில் பெறும் மதிப்பெண் மிக முக்கியமானதாக இருக்கிறது. எனவே, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்கு வணிகரீதியான முக்கியத்துவம் கிடைக்கிறது. இதற்காக, சில பள்ளிகள் சில குறுக்கு வழிகளையும் நாடிச் செல்கின்றன.அதுபோன்ற பள்ளிகளால்தான், தற்போது இ-புக்ஸ்கள் வெளியாகிஉள்ளன. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காவிடில், எதிர்காலத்தில் தேர்வு வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாவதை தடுக்க முடியாமல் போய்விடும்.

முன்கூட்டியே வெளியிடலாம்

வரும் கல்வியாண்டில், மாணவர்கள் புதிய பாடத்தில் பாடங்களை படிக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வினால், அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.பிளஸ் 2 நூல்களை உடனடியாக வெளியிட்டால், அரசுப் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையைப் பயன்படுத்தி முன்கூட்டியே ஓரளவாவது பாடங்களைப் படித்து புரிந்து கொள்ள முடியும். எனவே, பிளஸ் 2 பாட நூல்கள் தயாராகி விட்டால், அதை தாமதிக்காமல் வெளியிடுவதற்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இவ்விவகாரம் தொடர்பாக போலீஸில் புகார் அளிக்க பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

4 comments

  1. ஹலோ பாஸ், போன வருஷம் புத்தகம் வரதுக்கு முன்னாடியே கைடு வந்துருச்சுன்னு கேள்விப்பட்டிங்களா ? அது மட்டும் எப்படி வரும்? அரசாங்கம் தான் முன்கூட்டியே விடனும், கரக்டா ஜூன் மாசம் விட்டா பசங்க எப்படி படிப்பாங்க...

    ReplyDelete
  2. Please give permission to take special classes for +2 students during summer holidays.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives