மார்ச் 31 (ஞாயிறு) அன்றும் அனைத்து வங்கிகளும் இயங்கும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2019

மார்ச் 31 (ஞாயிறு) அன்றும் அனைத்து வங்கிகளும் இயங்கும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!


2018-2019 நிதியாண்டு முடிவடைவதையொட்டி, வருகிற மார்ச் 31ம் தேதிஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றைய தினம் வங்கிகள் அனைத்தும் இயங்கும் எனரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வருகிற மார்ச் 31ம் தேதியுடன் 2018-2019 நிதியாண்டு முடிவடைவதையொட்டி, அன்றைய தினம், நாட்டில் அனைத்து நிறுவனங்களும் தங்களது வரவு செலவு கணக்கை முடிக்கும் சூழ்நிலையில் இருக்கும்.

இந்தாண்டு மார்ச் 31ம் தேதிஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்று வங்கிகள் இயங்காமல் இருந்தால் அது அரசுக்கும், நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது அன்று செலவாகும் கணக்கை ஏப்ரல் 1ம் தேதி தான் பதிவு செய்யவேண்டிய நிலை இருக்கும்.எனவே,மார்ச் 31ம் தேதி அன்று அனைத்து வங்கிகளும்வழக்கம்போல் இயங்க வேண்டும் என்று ஆர்.பி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளதுஇதனை பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் ஆர்.பி.ஐ அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதுதவிர, மார்ச்30 மற்றும் மார்ச் 31 ஆகிய தேதிகளில் ஆன்லைன் பணபரிவார்த்தனையும் செய்யலாம். வங்கிகளில் கவுண்டர்கள் வருகிற மார்ச் 30ம் தேதி இரவு 8 மணி வரையிலும் மார்ச் 31 அன்று மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று காசோலை பெறுதல் மற்றும் செலுத்துதல் உள்ளிட்டவையும் இருக்கும் என்றும்தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி