கஜா கோரப்புயலில் பாதிக்கப்பட்ட பத்து சிறுமியருக்கு தலா ரூ.5000 செல்வ மகள் சேமிப்புத் திட்டத்திற்கு வழங்கிய சிங்கைவாழ் சிறுவன்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2019

கஜா கோரப்புயலில் பாதிக்கப்பட்ட பத்து சிறுமியருக்கு தலா ரூ.5000 செல்வ மகள் சேமிப்புத் திட்டத்திற்கு வழங்கிய சிங்கைவாழ் சிறுவன்!


கஜா கோரப்புயலில் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் சிறுமிகளின் அவலநிலையினை, அங்கு பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர் முனைவர் மணி.கணேசன் தம் முகநூல் பக்கத்தில் பகிர்ந்ததைக் கண்டு மனம் வருந்திய சிங்கப்பூரில் வாழும் இயலரசன் அவர்களின் அன்புமகன் தமிழினியன் என்பார் நாடு கடந்து வந்து நேரில் பள்ளிக்கு வருகைபுரிந்து தாய், தந்தை இழந்த பத்துக்கும் மேற்பட்ட சிறுமிகளின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 5000/= வழங்கி, அத்தொகையை ஆசிரியர் மணி.கணேசனின் வழிகாட்டலின் பேரில் அஞ்சலகத்தில் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்டத்தில் முதலீடு செய்து வழங்கியதை நன்றியுடன் பெற்றோர் ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் சிறுவனின் மனிதாபிமான உதவியை ஆசிரியர்களும் ஊர்மக்களும் மனதார பாராட்டி மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி