Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்ல கணக்கு வேண்டும்! தேர்தல் நன்னடத்தை விதிகள் வந்தாச்சு!


இதோ, அதோ என்று தேர்தல் தேதியும் அறிவித்தாகி விட்டது. இனி தொகுதி மற்றும் வேட்பாளர் அறிவிப்புதான் பாக்கி. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்பது உட்பட, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் நேற்று முன் தினமே அமலுக்கு வந்து விட்ட நிலையில், அனைவரும் அவற்றை பின்பற்றுமாறு, கோவை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, அரசியல் கட்சியினருடன் கலந்தாலோசனை கூட்டம், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர்ராஜாமணி தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ராமதுரைமுருகன், உதவி தேர்தல் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி பேசியதாவது:தேர்தல் நன்னடத்தை விதிகள், அமலுக்குவந்து விட்டன. அவற்றை அரசியல் கட்சியினர் முழு அளவில் ஏற்று, கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களில் பேனர்கள், பிளக்ஸ் வைப்பது, விளம்பரங்கள் செய்வது என, எந்த வகையிலும் விதிகளை மீறக்கூடாது. முறையான அனுமதியோடு விளம்பரம் செய்யலாம்.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு, தேர்தல் பிரசார நடவடிக்கை இருக்கக்கூடாது.

தேர்தல் பறக்கும் படையினர், தங்கள் வேலையை துவக்கி விட்டனர். அவர்கள், 24 மணி நேரமும் பணியில் இருப்பர்.10 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து, மொத்தம், 90 குழுவினர், தேர்தல் செயல்பாடுகளை கண்காணிப்பர்; வாகனங்களையும் சோதனை செய்வர்.ரூ.50 ஆயிரம்தான் லிமிட்!பணம் கொண்டு செல்வதற்கு, ரூ.50 ஆயிரம் வரை, அனுமதி தேவையில்லை. அதற்கு மேல் பணம் இருந்தால், கணக்கு வேண்டும். உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும்.அத்துடன் வருமான வரித்துறையும் விசாரணைக்கு வரும்.நன்னடத்தை விதிகளின்படி, பொது இடங்களில் இருக்கும், சிலைகள் மூடி வைக்கப்பட வேண்டும். படங்கள் அகற்றப்பட வேண்டும். இதில், காந்தி, திருவள்ளுவர், அம்பேத்கர் சிலைகள், படங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

படங்கள், போஸ்டர், பேனர் அகற்றுவதற்கு நாளை(இன்று) காலை 6:00 மணி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. புகார்கள், சந்தேகங்கள் இருந்தால், தேர்தல் ஆணையத்தின் தொடர்பு மையத்தை, 1950 என்ற கட்டணம் இல்லாத போன் மூலம் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.கட்சியினர் கோரிக்கை'தேர்தலில் ஓட்டளிப்பதற்கு, தொலைதுார பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களை அழைத்து வர வாகன வசதி செய்ய வேண்டும்' என்றும் அரசியல் கட்சியினர் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, ''புறம்போக்கு இடங்களில் வசித்தவர்களுக்கு, மாற்றிடம் கொடுத்து விட்டீர்கள். அவர்களது ஓட்டுகளையும் புதிய வசிப்பிட முகவரிக்கு மாற்றித்தர வேண்டும். கவுண்டம்பாளையம் தொகுதி பரப்பளவில் பெரியது. அதற்கு மூன்று பறக்கும் படையினர் போதாது. கூடுதல் குழுக்களை பணியில் நியமிக்க வேண்டும்,'' என்றார்.

1 comment

  1. எங்களை போல அப்பாவி மக்கள் திருமணம் , வேறு விசேஷத்துக்கு கைமாத்தா வாங்கின காசுக்கு கணக்கு காட்டணும்.......


    கட்சி காரணம் அனாமத்தா சுத்துவான் அவனை யாராவது எதிர் கட்சி காரணம் சொன்னால் ஒழிய பாக்க மாட்டீங்க.......


    போங்கடா நீங்களும் உங்க சட்டமும்.....

    ஏற்கனவே அரசியல் கட்சிகளிடம் இருந்து பறித்த பணத்துக்காக அரசியல் கட்சிகளின் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.......


    ஓட்டை இருக்கிறவரை ஒழிகி கொண்டே இருக்கும்.......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives