புதுக்கோட்டையில் 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான படைப்பாற்றல் கல்வி குறித்த மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2019

புதுக்கோட்டையில் 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான படைப்பாற்றல் கல்வி குறித்த மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி..



புதுக்கோட்டை,மார்ச்.12: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான படைப்பாற்றல் கல்வி முறை தொடர்பான மாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பயிற்சி அரங்கில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமையில் நடைபெற்றது.

பயிற்சியினை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது: படைப்பாற்றல் கல்வியில் மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்கும் செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.ஆங்கில பாடத்தில் ஆசிரியர் வழிகாட்டுதலோடு மாணவர்கள் வாசிக்க வேண்டும்.மாணவர்கள் தானே கற்றல் ,பன்முகத்நிறனை வெளிக்கொணர்தல் ,புரிந்து கற்றலுக்கு உதவுதல் பாடக் கருத்துகளை மனவரைபடத்தின் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.மாணவர்களின் தனித்தன்மையை ஆசிரியர்கள்  வெளிக்கொண்டு வர வேண்டும்.மாணவர்கள் குழுச்செயல்பாடுகளில் ஈடுபட்டு கற்க வேண்டும். வகுப்பறையில் குறை திர்கற்றல் நடைபெற வேண்டும்.பயிற்சியில் செய்த செயல்பாடுகள் அனைத்தையும் மார்ச் 16 சனிக்கிழமை அன்று நடைபெறும்  குறுவளமைய பயிற்சியில் ஆசிரியர்களுக்கு கொடுக்க வேண்டும்.மேலும் சமுதாயத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை மாணவர்களுக்கு கற்றுக் கொடுங்கள் என ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்டார்.

பயிற்சிக்கு வந்திருந்த அனைவரையும் மெ.ரெகுநாததுரை வரவேற்றுப் பேசினார்.முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்( மேல்நிலை) ஜீவானந்தம் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.

பயிற்சியின் கருத்தாளர்களாக அனந்தராமன் மற்றும் சக்திவேல்பாண்டி செயல்பட்டனர்.பயிற்சியில் தலைமைஆசிரியர்கள்,ஆசிரியர்கள்,வட்டார வளமைய பயிற்றுநர்கள் 100 பேர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி