முதுநிலை மருத்துவம் பல் மருத்துவம், டிப்ளமோ தரவரிசை பட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2019

முதுநிலை மருத்துவம் பல் மருத்துவம், டிப்ளமோ தரவரிசை பட்டியல் வெளியீடு


தமிழகத்தில் முதுநிலை மருத்துவம், முதுநிலை பல் மருத்துவம், டிப்ளமோ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.நாடு முழுவதும் முதுநிலை மருத்துவம், முதுநிலை பல் மருத்துவம், முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கான முதுநிலை நீட் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் 2018ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி தொடங்கியது.

ஜனவரி 6ம் தேதி நடந்த இணைவழித் தேர்வில் 1.43 லட்சம் பேர் பங்கேற்றனர். கணினி வழியாக நடந்த இந்த தேர்வு முடிவுகள் ஜனவரி 31ம் தேதி வெளியானது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்டி  படிப்புக்கு 674 இடங்களும், முதுநிலை டிப்ளமோ படிப்புக்கு 501 இடங்களும், முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கு(எம்டிஎஸ்) 198 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தல்  மார்ச் 11ம் தேதி  தொடங்கியது. இந்நிலையில் நேற்று எம்டி, எம்டிஎஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த மாதத்துக்குள்  கலந்தாய்வை நடத்தி முடிக்க மருத்துவக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி