கணிதத்தில் நேரடி கேள்விகள்: சி.பி.எஸ்.இ., மாணவர்கள் மகிழ்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2019

கணிதத்தில் நேரடி கேள்விகள்: சி.பி.எஸ்.இ., மாணவர்கள் மகிழ்ச்சி


சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், பத்தாம் வகுப்புக்கான கணித வினாத்தாளில், புத்தகத்தில் உள்ளநேரடி வினாக்கள் இடம் பெற்றதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், நேற்று, பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்துக்கு தேர்வு நடந்தது. சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் வழக்கமாக, கணித வினாத்தாள்கள் கடினமாகஇருக்கும். பெரும்பாலும் புத்தகத்தின் உள் பகுதிகளில் இருந்து,அதிக கேள்விகள் இடம் பெறும்.இந்தாண்டு தேர்வு எப்படி இருக்குமோ என, மாணவர்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு நிம்மதி அளிக்கும்வகையில், நேற்று, கணித வினாத்தாள், மிக எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

பெரும்பாலான வினாக்கள், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பின்பற்றும், தேசிய ஆசிரியர் கல்வியல் ஆராய்ச்சி கவுன்சிலின் பாட புத்தகத்தில் இருந்தே இடம் பெற்றன. அதிலும், பல வினாக்கள் நேரடி வினாக்களாக இருந்ததால், மாணவர்கள் எளிதாக பதில் அளித்தனர்.பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் மேற்கொண்ட, பெரும்பாலான கேள்விகள், வினாத் தாளில்இடம் பெற்றது. அதேபோல, சி.பி.எஸ்.இ.,யின் விதிகளின்படி, சில கேள்விகள் மட்டும், மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் வகையில் இடம் பெற்றன. ஒரு கேள்வியில், எழுத்துப் பிழை இருந்ததாகவும், அதை மாணவர்கள் தெரிந்துக் கொண்டதாகவும், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி