பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் - திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2019

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் - திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு.


மத்திய,  மாநி  அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்...

திமுக தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் அறிவிப்பு.

திமுக-வின் தேர்தல் அறிக்கை பின்வருமாறு

* தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்பட , தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க சட்டத்திருத்தம் செய்யப்படும்.

* விவசாயத்திற்கு தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

* மத்திய நிதி மாநிலங்களுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

* மத்திய நிதிக்குழு முடிவுகள் மாநிலங்கள் மன்றத்தால் வரையறுக்கப்பட வேண்டும்

* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்

* வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் தொழில் துவங்க ரூ.50,000 வட்டியில்லா கடன் வழங்கப்படும்

* மாணவர்களுக்கு ரயில்களில் இலவச பயணசலுகை

* கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரும், அருங்காட்சியகம் அமைக்கப்படும்

* சமையல் எரிவாயு சிலிண்டர் விலை முன்பிருந்தது போல குறைக்கப்படும். சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டு, சிலிண்டர் விலை குறைக்கப்படும்

* 1 கோடி பேர் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவர்

* பெட்ரோல், டீசல் விலை பழைய முறைப்படியே நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* உயர்த்தப்பட்ட கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும்

* மாணவர்களுக்கான கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்

* மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* புயலால் பாதிக்கப்படும் இடங்களில் நிரந்தர பாதுகாப்பு இல்லங்கள் அமைத்து தரப்படும்

* சேது சமுத்திர திட்டம் பணிகள் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை

* பாலியல் குற்றங்களை தடுக்க உரிய சட்டம் கொண்டு வரப்படும்

* பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

*  ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தப்படும்

* ஏழை நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்

* காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்

*  100 நாள் வேலை திட்டத்தின் எண்ணிக்கை 150 நாளாக உயர்த்தி அறிவிக்கப்படும்

*  நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்படும்

*  தனிநபர் ஆண்டு வருமானத்தை ரூ.1.50 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்


* சுங்கச்சாவடிகளில் டெண்டர் முடிந்தும் வசூலிக்கப்பட்டு வரும் வரி வசூல் ரத்து செய்யப்படும்

* நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும்


20 comments:

  1. Tasmac kadai adigamaga thiranthu tamizh natil elam pengalin thali arukkapattu ,avergal vidhavai akkappaduvargal ,

    ReplyDelete
  2. அருமையான தேர்தல் அறிக்கை வெற்றி உறுதி

    ReplyDelete
  3. நல்ல வரவேற்பு கிடைக்கும் மகிழ்ச்சி

    ReplyDelete
  4. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் இது நல்ல செய்தி ஆனால் படித்த பட்டதாரிகளுக்கு அரசு வேலை பற்றி நல்ல செய்தி இல்லையே

    ReplyDelete
  5. Part time teachers ipala kannuku theriyamataga

    ReplyDelete
  6. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் இது நல்ல செய்தி

    ஆனால் படித்த பட்டதாரிகளுக்கு அரசு வேலை பற்றி நல்ல செய்தி இல்லையே

    ReplyDelete
  7. Tet trb new post yathyumparthi nwes?????????

    ReplyDelete
  8. Tet trb posting ithupathi newd?????????

    ReplyDelete
  9. Tamil Nadu valaivaipukal anaithum thamizhaga manavargaluku oru news vandhal nalla irukkum

    ReplyDelete
  10. கொண்டு வந்தது நீங்கள் இப்போது ரத்து😊😊😊😊

    ReplyDelete
  11. கொண்டு வந்தது நீங்கள் இப்போது ரத்து😊😊😊😊

    ReplyDelete
  12. Old pension scheme DMK will continue..Hai Super, Super,Super,Super... so all teacher community will vote to DMK... Fool Peoples... Cleaver Politicians... Valga valamudan... Enjoyeeeeeeeeee

    ReplyDelete
  13. athan 5 years a nirapama irukira vaccancies nirapapadum stalin solirukar..athula kandipa govt arts college and engineering collge asst professors,BT&PG TRB vaccancies kandipa oolalea ilama nichayam udane fill panuvanga.. so 40 mp election & 21 by election la dmk 100% win panna vaikalam..intha chance nala use panikiranum friends..kandipa nama kastam neengum..

    ReplyDelete
  14. 2006 முதல் 2011 வரை இவங்க தானே ஆட்சி செஞ்சாங்க அப்போதே இதை செஞ்சிருக்கலாமே

    ReplyDelete
    Replies
    1. appa yarum ipadi kastatha anupavikala..sgt 2500,BT 4000,PG 4500 a udane regular pay aakinathu dmk govt..therincha nee peasu..

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி