அரசு தொடக்கப்பள்ளிகளில் அரசு செலவில் வாங்கப்பட்ட நாளிதழ்கள், எடைக்கு விற்று பணத்தை ஒப்படைக்க தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2019

அரசு தொடக்கப்பள்ளிகளில் அரசு செலவில் வாங்கப்பட்ட நாளிதழ்கள், எடைக்கு விற்று பணத்தை ஒப்படைக்க தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு!


அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் அரசு செலவில் வாங்கப்பட்ட நாளிதழ்களை எடைக்கு விற்று பணத்தை ஒப்படைக்க தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் 2018 - 2019-ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் பொது அறிவு, மொழித்திறனை வளர்த்துக்கொள்ள பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் அரசு செலவில் தினமும் நாளிதழ்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவ்வாறு வாங்கப்பட்ட நாளிதழ்களை பள்ளிகளுக்கு அருகில் உள்ள பழைய இதழ்களை எடைக்கு வாங்கும் கடைகளில் விற்று அந்தப் பணத்தை டி.டி.யாக எடுத்து வட்டாரக் கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் தரும் டி.டி.க்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சென்னையில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தில் நேரிலும் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி