NHIS மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மறுக்கப்பட்ட 100% Full claim தொகையை வட்டியும், முதலுமாக அபராதத்துடன் பெறுவது எப்படி...???* - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2019

NHIS மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மறுக்கப்பட்ட 100% Full claim தொகையை வட்டியும், முதலுமாக அபராதத்துடன் பெறுவது எப்படி...???*

முழு காப்பீட்டுத் தொகை மறுக்கப்பட்டதால் பணத்தைக்கட்டி டிஸ்சார்ஜ் ஆன பிறகு வழக்கு பதிவு செய்து வரவேண்டிய காப்பீட்டுத் தொகையை வட்டியுடன் + தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கான அபராதம் + வழக்கிற்கான செலவு என மொத்தமாக பெற்ற ஆசிரியரின் வழக்கு விபரம்...


கரூர் மாவட்டம்- கடவூர் ஒன்றியம், எருதிக்கோன்பட்டி தலைமை ஆசிரியர் திரு.மாணிக்கம் அவர்களுடைய துணைவியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000 .


*இதில் நமது TNNHIS ரூ.1,70,000 மட்டும் காப்பீட்டுத் தொகையாக அனுமதித்தது.*

அதற்குமேல் தர மறுத்து விட்டது.

மாணிக்கம் அவர்கள்,
கரூர் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, தொடர் முயற்சியினால் தீர்ப்பு பெறப்பட்டது. 


*தீர்ப்பில் முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு,*


_அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும், மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது._


_நமது மருத்துவ செலவுகள், அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் TNNHIS ஏற்கவேண்டும்._


(தங்கும் அறை, சிகிச்சை மேற்கொள்பவருக்கான உணவு ,மருந்து , மருத்துவ சிகிச்சைக்கான செலவு இவை அனைத்தும் இதில் அடங்கும்)


01.07.2016 முதல் 30.06.2020 வரை ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை பெற அனைவருக்கும் உரிமை உண்டு.


அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்தது எனவே விழிப்புடன் இருக்கவும். 


*ஒரு சில அறுவை சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000 வரை காப்பீடுத் தொகை வழங்கப்படும்.*


அரசாணையில் வரையறை செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சைக்கு மட்டும் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்..


*NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் - GO 391 , Date : 10.12.2018*

GO தேவைப்படின் கீழே கிளிக் செய்யவும்

************************
கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000.

கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.45,000.

இந்த இரண்டு சிகிச்சைக்கு மட்டுமே NHIS திட்டத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..


*அரசாணையில் உள்ள மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெற இயலும்..*

*************************

டிஸ்சார்ஜ் ஆகாமல் இருந்தால் full claim வாங்கிவிடலாம்..

(அட்மிசன் போட்ட பொழுது முன் பணமாக கட்டிய தொகையையும் திரும்ப வாங்க வேண்டியது நமது உரிமை)


*டிஸ்சார்ஜ் ஆன பிறகு full claim வாங்க நினைத்தால் வழக்கு பதிவு செய்து மட்டுமே வாங்க இயலும்..*

*************************

*அரசாணைகள் ஏதேனும் தேவைப்படின் கீழே சொடுக்கவும்- search-ல் அரசாணை எண்ணை பதிவு செய்து அரசாணையை பெறலாம்..*
http://www.tn.gov.in/go_view/dept/9


*New health insurance Guideline தேவைப்படின் கீழே சொடுக்கவும்*
http://www.tn.gov.in/karuvoolam/pdfs/fin_e_222_2018.pdf


*NHIS Project Officer&  District Coordinators cell number, office address, mail id-க்கு கீழே சொடுக்கவும்*
http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/TNContact.aspx


(NHIS Insurance Complaint number- 7373073730)


தோழமையுடன்,
தேவராஜன்,
தஞ்சாவூர்.

18 comments:

  1. Sir appa transport la work panni retired akitaru avaruku NHIS ID card vanga mudiyuma vangalamnu enga epdi vangurathu naga tirchy district sir plz guide pannunga sir

    ReplyDelete
  2. Sir appa transport la work panni retired akitaru avaruku NHIS ID card vanga mudiyuma vangalamnu enga epdi vangurathu naga tirchy district sir plz guide pannunga sir

    ReplyDelete
    Replies
    1. Transport corporation-ஐ தொடர்பு கொள்ளுங்கள்

      Delete
  3. Sir tirchy district la NHIS Scheme erukura hospital epadi therinjukirathu

    ReplyDelete
    Replies
    1. *New health insurance Guideline தேவைப்படின் கீழே சொடுக்கவும்*
      http://www.tn.gov.in/karuvoolam/pdfs/fin_e_222_2018.pdf

      இதில் முழு விபரமும் உள்ளது தோழர்

      Delete
  4. Court order copy is not clear. Pls send clear copy. Thank u sir

    ReplyDelete
    Replies
    1. Photo vai click seiungal photo load aagi clear print kidaikum

      Delete
    2. Sir DCR. Operation kanneer pai amaipu operation ku nearly 40000 achu adhu claim panna mudiyuma

      Delete
  5. Nhis is waste one to the employees.it is useful to insurance companies only . because it's not claim to the employees

    ReplyDelete
    Replies
    1. உறுதியுடன் போராடுபவர்கள் full claim பெறுகின்றனர்..

      Delete
  6. Sir retired anavangalukum NHIS ID card vanga mudiuma

    ReplyDelete
  7. ஓய்வூதியர்களுக்கும் உண்டு

    ReplyDelete
  8. if men can claim for parents,why not marriedwomen can claim for their parents?

    ReplyDelete
    Replies
    1. தற்பொழுது இருவருக்குமே தனது பெற்றோருக்கு இந்த திட்டத்தில் பயன் பெற சலுகை மறுக்கப்பட்டுள்ளது..

      வழக்கு தொடுத்தால் சாத்தியம் உண்டு..

      Delete
  9. Sir enathu kulanthai eranthu vittathu nan remove family planning(laproscopy)seiyalama NHIS claim Panna mudiyathu enkirathu Sir please reply pannuga

    ReplyDelete
  10. சார் நான் அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை கட்டளை பணியாளராக பணிபுரிகிறேன்.என் மனைவிக்கு கிட்னியில் சீழ் பிடித்து கதிரியக்க அறுவை சிகிச்சை அவசரமாக திருச்சி Q Med மருத்துவமனையில் செய்யப்பட்டு செலவான ரூ.1,30,000/- முழுவதையும் செலுத்தி விட்டேன்.இதனை Reimbursement செய்ய முடியுமா சார்.Please reply

    ReplyDelete
  11. நான் அரசு ஊழியர். எனது மனைவி பிரசவத்திற்கு claim செய்யமுடியுமா.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி