Public Exam 2019 - Rules for Students ( பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவை ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2019

Public Exam 2019 - Rules for Students ( பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவை )


12th Std & 11th & 10th Std (RULES)
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவை:

1) தேர்வு எழுதும் பள்ளிக்கு சரியாக தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு 9:30 மணிக்கு முன்பே சென்றுவிடவேண்டும்.
2) HALL TICKETஐ கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.
3) Blue பேனாவில் மட்டும்தான் தேர்வு எழுத வேண்டும். வேறு எந்தப் பேனாவிலும் தேர்வு எழுதக் கூடாது. sketch use பண்ணக்கூடாது.
4) Blue Pen -2, Pencil, Long Size Scale, Eraser, Ink Eraser, Sharpner, Pro-Circle, Geometry Items எடுத்துச் செல்ல வேண்டும்.
5) தேர்வு அறைக்குள் Phone, Kerchief, Scientific Watch, Scientific Calculator, Purse, Towel, Bag,  Box, CellPhone ஆகியவற்றை எடுத்துச் செல்ல கூடாது. சாதாரண Watchஐ அணியலாம். மேலு‌ம் Chappal, Shoe, Belt அணிந்து செல்லக் கூடாது.
6) 10 மணிக்குமேல் தேர்வுக்கு சென்றால் தேர்வு எழுத முடியாது.
7) எழுதிய விடையையே மீண்டும் மீண்டும் எழுதக்கூடாது.
8) தாங்கள் விடைகளை எழுதி அதனை அடித்து விட்டால் உடனடியாக அதனை ஆசிரியரிடம் தெரிவித்துவிட்டு, பின்னர் "இது என்னால் அடிக்கப்பட்டது" என்று விடைத்தாளில் அடித்த வினாவின் பக்கத்தில் எழுத வேண்டும்.
9) எதனையும் அடித்தோ, திருத்தியோ, கிறுக்கியோ, Whitener உபயோகப்படுத்தியோ எழுதக்கூடாது.
10) குறைந்தது 15 பக்கங்களுக்கு மேல் விடை எழுத வேண்டும். வெறும் 5 பக்கங்கள் 6 பக்கங்கள் என விடை எழுதினால் Pass ஆவது கடினம்.
11) குறிப்பாக விடையை எழுதாமல் Gap விடக்கூடாது.
12) Question Numberஐ கவனமாக எழுத வேண்டும்.
13) Question Paperல் இருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் விடை எழுத வேண்டும். எதனையும் விட்டுவிடக்கூடாது.
14) அனைத்துப் பகுதிகளுக்கும் விடை அளித்தால் மட்டுமே Passஆக முடியும்.
15) Answer Paperன் முன்பக்கத்தில் உள்ள விவரங்களை கவனமாக எழுத வேண்டும்.  Name, Exam Number, Photo, Subject, Medium அனைத்தும் சரியாக உள்ளதா என கவனமாக சரிபார்க்க வேண்டும்.
16) தேர்வு எழுதி முடித்தவுடன் Page Numberஐ கவனமாக முன்பக்கம் எழுத வேண்டும்.
17) Name & Signatureஐ Englishல் போடுவது நல்லது. (தமிழ்த்தேர்வு உட்பட)
18) சந்தேகங்கள் இருந்தால் தேர்வு அறையில்  ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறவும்.
19) Question Paperல் எதற்கும் விடையை எழுதவோ, குறிக்கவோ கூடாது.
20) தேர்வின்போது Rough Work, Maths sum calculation போடுவதற்கு  விடைத்தாளின் கீழ் பகுதியை மட்டுமே  பயன்படுத்த வேண்டும். Sideல் Calculation எழுதக்கூடாது.
21) Answer Sheetல் Answer எழுதும்போது எந்த இடத்திலும் Name & Exam Numberஐ எழுதக்கூடாது.
22) தேர்வு அறையில் தங்களுக்கு கொடுக்கும் Attendance Sheetல் மாணவர்கள் கண்டிப்பாக கையெழுத்து போட வேண்டும்.
23) தேர்வர்கள் விடைத்தாளின் முன்பக்கம் உள்ள Present என்னுமிடத்தில் (√) Tick குறி போட  வேண்டும்.
24) Choose the correct answer சரியான விடை எழுதும் போது கண்டிப்பாக option ( a/ b/ c/ d) answer எழுத வேண்டும். a b c d என்னும் option போடாமல் விடை எழுதினால் அது தவறு ஆகும்.
25) எந்த விடையும் கலந்து கலந்து எழுதக்கூடாது. அதாவது தெரிந்த விடைகளை முன்னரும், தெரியாத விடைகளை யோசித்து பின்னரும் எழுதக்கூடாது. Order மாறாமல்  வரிசை மாறாமல் ஒரே சீராக எழுத வேண்டும்.
26) எந்த விடையும் incomplete ஆக எழுதக் கூடாது. முழுமையாக விடை எழுத வேண்டும்.
27) தேர்வை நல்ல முறையில் எழுதி அதிக மதிப்பெண்கள் பெறவும்.
வாழ்த்துக்கள்👍👍👍
( Exam - Rules for Students)

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி