TNPSC - அரசுப் போட்டித் தேர்வு எழுதி ஒரேநேரத்தில் பணி நியமனம் பெற்ற தாய், மகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2019

TNPSC - அரசுப் போட்டித் தேர்வு எழுதி ஒரேநேரத்தில் பணி நியமனம் பெற்ற தாய், மகள்!


தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்த தாயும் மகளும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய  குரூப்- 4 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்று ஒரே நேரத்தில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

தேவதானப்பட்டி விவசாயி ராமச்சந்திரன் மனைவி சாந்திலட்சுமி (48). பி.எஸ்.சி.,படித்துள்ளார். மகள் தேன்மொழி (27) எம்.ஏ. படித்துள்ளார். ராமச்சந்திரன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.  சாந்திலட்சுமி, தேன்மொழி ஆகியோர் தேனியில் திண்ணை அமைப்பின் சார்பில் செயல்பட்டு வரும் அரசு போட்டித் தேர்வு இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற குரூப்- 4 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை எழுதிய இருவரும் தேர்வில் வெற்றி பெற்றனர். கலந்தாய்வு மூலம் சாந்திலட்சுமி பொது சுகாதாரத் துறை மருந்தகப் பிரிவிலும், தேன்மொழி இந்து சமய அறநிலையத்துறையில் இளநிலை உதவியாளராகவும் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர்.போட்டித் தேர்வு மூலம் பணி நியமனம் பெற்ற சாந்திலட்சுமி, தேன்மொழி ஆகியோருக்கு திண்ணை அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள்வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து சாந்திலட்சுமி கூறியது:அரசு போட்டித் தேர்வுக்கான வயது வரம்பு குறித்துஎனக்குத் தெரியாது. எனது மகளை திண்ணை பயிற்சி வகுப்பில் சேர்க்க வந்தேன். அங்கு எனக்கு போட்டித் தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, என்னையும் பயிற்சி வகுப்பில் சேர்த்து படிக்க வைத்தனர். எனது மகள் தேன்மொழியின் உதவியுடன் வீட்டிலும் பயிற்சி பெற்று இருவரும் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனம் பெற்றுள்ளோம் என்றார்.

12 comments:

  1. முயற்சிக்கும் பயிற்சிக்கும் சாதிக்க வேண்டும் எண்ணத்திற்குமான வெற்றி... நேர்மையாக பணியாற்றிட வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Saathipatharkku vayasu thadai illai nu nirupichitinga...! 👌🙏

    ReplyDelete
  3. GOVERNMENT AIDED SCHOOL VACANCIE FOR PERMANENT POST

    💐BT பட்டதாரி ஆசிரியர் பணியிடம்
    💐BA.BEd-History-3
    community-MBC,SC and SCA

    🌸Bsc BEd-(MBC , SC and SCA)- SCIENCE and MATHS-4

    CANDIDATE MALE&FEMALE

    🌹 MBC- HISTORY and Science-2
    MALE&FEMALE

    ✍Drawing teachers
    MALE&FEMALE
    Immediately contact: +917538812269
    Send your contact information or resume to govtaidjob@gmail.com

    ReplyDelete
  4. Congratulations to mother and daughter..

    ReplyDelete
  5. முயன்றால் முடியாதது எதுவுமில்லை வயது ஒரு தடையில்லை

    ReplyDelete
  6. Super .....
    Congrats ...

    Poor people ku help pannunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி