TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செல்லாது: மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2019

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செல்லாது: மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்தது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக்குகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017-ம்ஆண்டு தேர்வுநடத்தியது. இதில்ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 569 பேர்பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்ச்சிபெற்ற 2 ஆயிரத்துக்கும்மேற்பட்டோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கும் அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் 196 பேர் வினாத்தாளில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் காரணமாக இந்த தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கடந்த 2018 பிப்.8 அன்று உத்தரவிட்டது.தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இந்த தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சரியானது தான் என தீர்ப்பளித்தார்.ஆனால் இதே கோரிக்கை தொடர்பாக உயர் நீதிமன்றமதுரைகிளையில் தொடரப்பட்ட வழக்கைவிசாரித்ததனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘குற்றச்சாட்டுக் குள்ளான 196 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு தேர்ச்சியடைந்த தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

மேல்முறையீடு

சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பிலும், உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது.இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் பிறப்பித்தஉத்தரவு செல்லாது. முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரின் விண்ணப்பங்களை மட்டும் நிராகரித்துவிட்டு, தேர்ச்சி பெற்ற பிற தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி நியமனம் வழங்க வேண்டும். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைகிளை பிறப்பித்துள்ள உத்தரவை நாங்கள் உறுதிசெய்கிறோம்.மேலும் இந்த நடைமுறைகளை வரும் ஏப். 30-க்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளனர்.

7 comments:

  1. What about government decision

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. How they are telling only 196 fraudsters. Is there any evidence for that?

    ReplyDelete
  4. அரசு ஆட்சியை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துகிறது. மக்களைப் பற்றி கவலைப்படவில்லை

    ReplyDelete
  5. In pgtrb chemistry what about 6 mark?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி