தேர்வு முறைகேடு விவகாரம் :130 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது என கூறி பட்டத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2019

தேர்வு முறைகேடு விவகாரம் :130 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது என கூறி பட்டத்தை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்


அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில், 132 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய 132 மாணவர்களுக்கு பட்டம் வழங்க முடியாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் சிக்கிய மாணவர்கள் அனைவரும் அரியர்ஸ் வைத்துள்ள பழைய மாணவர்கள் ஆவர் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மாணவர்களிடம் பணம் வாங்கி விடைத்தாள்களை மாற்றி வைத்தது அம்பலம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017-2018ம் ஆண்டுகளில் நடந்த தேர்வின்போது மாணவர்களின் விடைத்தாளை திருடி, மீண்டும் மாணவர்களை எழுத வைத்து அவர்களை அதிக மதிப்பெண் எடுக்க  வைத்தது கண்டுபிடிக்கபட்டது.  இதற்காக மாணவர்களிடம் இருந்து 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு விடைத்தாள்கள் மாற்றி வைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில் ஓரிரு பக்கங்கள் மட்டும் எழுதி விட்டு, மற்ற பக்கங்களில் எதுவும் எழுதாமல் கொடுத்துள்ளனர்.

அந்த விடைத்தாளை தேர்வு முடிந்து ஓரிரு நாட்களுக்கு பின்னர்  சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் தற்காலிக அலுவலக உதவியாளர்கள் கொடுத்துள்ளனர். எழுதப்படாமல் விட்ட பக்கங்களில் சரியான விடைகளை நிரப்பி அந்த மாணவர்கள் தற்காலிக அலுவலக உதவியாளரிடம் கொடுத்துள்ளனர். இது குறித்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,  7 மண்டலங்களை சேர்ந்த 37 தற்காலிக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

130 மாணவர்களின் பட்டமும் ரத்து

இந்நிலையில் இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட 130 மாணவர்களின் பட்டத்தை ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விசாரணைக்குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 130 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. இந்த இத்துப்போன semester exam எழுதி பாஸ் பண்ண வழியில்லாமல் குறுக்கு வழியைத் தேடும் நீங்கள் எல்லாம் பட்டம் வாங்கி என்னய்யா செய்யப்போறீங்க.

    ReplyDelete
  2. Mistakes done only by temporary employees... Not by officials and politicians..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி