ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2019

ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு!


இந்திய ரயில்வே துறையில், மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த தேர்வு பற்றிய அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகியிருந்தது. தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் 07.04.2019-லிருந்து 22.04.2019 வரை கூடுதலாக 15 நாட்கள் அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணிகள்: (மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு)
ஜூனியர் ஸ்டெனேகிராஃபர்
சட்ட உதவியாளர்
தலைமை சமையற்காரர் / சமையற்காரர் உள்ளிட்ட 30 வெவ்வேறு பணிகள்

காலிப்பணியிடங்கள்:
மொத்தம் = 1,665 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு வெளியான தேதி: 23.02.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.04.2019
ஆன்லைன் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டிய நாள்: 28.04.2019
ஆப்ஃலைன் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்த கடைசி நாள்: 26.04.2019, மதியம் 01.00 மணி
விண்ணப்பத்தை ஆன்லைனில் முழுமையாக சமர்ப்பிக்க கடைசி நாள்: 30.04.2019
கணினி வழித்தேர்வு ஜூன் - ஜூலை 2019 இல் நடைபெறும்.

தேர்வுக்கானக் கட்டண விவரம்:
1. பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் - 500 ரூபாய்
2. மற்ற விண்ணப்பதாரர்கள் (எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், திருநங்கை உட்பட) - 250 ரூபாய்

குறிப்பு: முதற்கட்ட கணினி வழித்தேர்வுக்குப் பின்பு பொதுப்பிரிவு விண்ணப்பதாரர் செலுத்திய தேர்வுக்கட்டணத்திலிருந்து ரூ.400 ரூபாயும், மற்ற விண்ணப்பதாரர் செலுத்தியதிலிருந்து ரூ.250 ரூபாயும் விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்படும்.

வயது வரம்பு:

குறைந்த பட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 45 வரை இருத்தல் வேண்டும். பணிகளை பொறுத்து வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.

ஊதியம்:

குறைந்த பட்சமாக ரூ. 19,900 முதல் அதிகபட்சமாக ரூ.47,600 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

கணினி வழித்தேர்வு மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்வித்தகுதி:

மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவில் உள்ள பணிகளுக்கு, குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேற்குறிப்பிட்ட வகையான பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு பணிகளுக்கு, https://chennai.rly-rect-appn.in/rrbmic2019/ - என்ற இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். 

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி