ஏப்ரல் 18-ம் தேதி அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் மீறும் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2019

ஏப்ரல் 18-ம் தேதி அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் மீறும் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை


வாக்குப்பதிவு நாளான ஏப்.18-ம் தேதி அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் துறை ஆணையர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் ஆகியோர் தொழில் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக தொழிலாளர் துறை ஆணையர் ஆர்.நந்தகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்.18-ம் தேதி நடைபெறுகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவுரைகளின்படி, தமிழகம் முழுவதும் உள்ள தொழில் மற்றும் வணிக, உணவு, தோட்ட நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், தினக்கூலி, தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் ஏப்.18-ம் தேதி தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட வேண்டும்.விடுமுறை அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாகபுகார் அளிக்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஒருங்கிணைப்பாளர் சு.பொன்னுசாமி - 9600198875, தொழிலாளர் துணை ஆணையர் தே.விமலநாதன் - 8778270221, டி.புனிதவதி -9786910097, வெற்றிச்செல்வி - 9840120925 உள்ளிட்டோரை அந்தந்த அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் ம.ஜவகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 18-ம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயங்கும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்யும் வகையில் கட்டாயமாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.இது தொடர்பான புகார்களை இணை இயக்குநர்களிடம் 9444221011, 9444002025, 9444006905, 9843431020, 9444014305, 9443169506 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி