அறிவிக்கப்பட்டபடி 19-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2019

அறிவிக்கப்பட்டபடி 19-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வரும் 19-ம் தேதி காலை 10 மணி வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

12-ம் வகுப்பிற்கான  தேர்வுகள் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி 19-ம் தேதி முடிவடைந்தன. அதைத்தொடர்ந்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகளும் முடிந்துள்ளன. இதன் முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதால், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி மாற்றப்படலாம் என்ற ஒரு தகவலும் வெளியாகியது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் செங்கோட்டையன், தூய வெள்ளி என்ற சொல்லப்படும் 19-ம் தேதி அன்று காலை 10  மணிக்கு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 10:02 மணியளவில் குறுச்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்படும் என தெரிவித்தார்.  இதற்கிடையே, கடந்த 11-ம் தேதி, இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனரிடம் கேட்டபோது, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 19-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், அதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும்  தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இந்த செய்தியை கண்டு அமெரிக்காவே வியப்படைகிறது...

    அடுத்த பத்திரிகையாளர் சந்திப்புகளை செங்ஸ் என்கின்ற ரோபோ செய்யும்....

    அந்த ரோபோ அரை நிமிடத்தில் 600 பொய்களை சொல்லும் வகையில் தயாரிக்க பட்டுள்ளது......

    ஜப்பான் பிரதமர் நேற்று இதை பற்றி தொலை பேசியில் விளக்கினார்....


    எங்கள் ரெண்டு பேருக்குமே ஆங்கிலம் தெரியாது என்பது சிறப்பு....

    ReplyDelete
  2. ஐயா சொல்லிட்டாருல. அப்போ சத்தியமா வராது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி