தேர்தல் 2019 - மை வைத்த விரலை செல்ஃபி எடுத்து அனுப்பினால் ரூ.7,000 பரிசு... தேர்தல் ஆணையம் அதிரடி..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2019

தேர்தல் 2019 - மை வைத்த விரலை செல்ஃபி எடுத்து அனுப்பினால் ரூ.7,000 பரிசு... தேர்தல் ஆணையம் அதிரடி..!



வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் ரூ.7000 பரிசு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதி இருக்கிறது. இந்த தொகுதியில் வருகிற 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இந்த முறை ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க மிசோரம் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.அதற்காக முதல்முறை வாக்காளர்கள் ஓட்டுபோட்டு முடித்ததும் ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்டுள்ள 'மை'யை செல்பி படம் எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்களித்ததை உறுதி செய்ததை காட்டும் மிகச் சிறந்த செல்பிக்கு முதல் பரிசாக ரூ.7ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது சிறந்த செல்பிக்குரூ.3 ஆயிரம் பரிசும், 3வது சிறந்த செல்பிக்கு ரூ.2 ஆயிரம் பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி