அரசு ஊழியர்களுக்கு தாமதமாகும் மார்ச் 2019 ஊதியம்: நாளை கிடைக்க வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2019

அரசு ஊழியர்களுக்கு தாமதமாகும் மார்ச் 2019 ஊதியம்: நாளை கிடைக்க வாய்ப்பு


வங்கிகளுக்கான ஆண்டுக் கணக்கு முடிவு, வார விடுமுறை போன்ற காரணங்களால் அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் வியாழக்கிழமை (ஏப்.4) கிடைக்கும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளில் (30 அல்லது 31) மாத ஊதியம் அளிக்கப்படுவது வழக்கம்.ஆனால், மார்ச் மாதம் நிதியாண்டின் கடைசி மாதம் என்பதாலும், வங்கிகளில் ஆண்டுக் கணக்குகள் முடிவடையும் மாதம் என்பதாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மாத ஊதியம் இதுவரை அளிக்கப்படவில்லை. இதுகுறித்து அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், மார்ச் மாத இறுதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தது.

மேலும், ஆண்டுக் கணக்கு முடிவு காரணமாக ஏப்ரல் 1-ஆம் தேதியான திங்கள்கிழமையும் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறவில்லை. இந்த நிலையில்,  செவ்வாய்க்கிழமை (ஏப். 2)முதல் வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, வியாழக்கிழமை (ஏப்.4)  முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளில் மாத ஊதியம் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி