பெற்றோர் ஓட்டு போட்டால் பிள்ளைகளுக்கு 4 மதிப்பெண்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2019

பெற்றோர் ஓட்டு போட்டால் பிள்ளைகளுக்கு 4 மதிப்பெண்'


*லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க செய்யும் முயற்சியில், தேர்தல்ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது

*இதற்கு வலுசேர்க்கும் வகையில், கர்நாடக மாநில தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, நுாதன திட்டத்தை அறிவித்துள்ளன

*கர்நாடக மாநிலத்தில், தனியார் பள்ளிகளில் படிக்கும், மாணவ - மாணவியரின் பெற்றோர் ஓட்டு போட்டால், பிள்ளைகளுக்கு தனியாக நான்கு மதிப்பெண் வழங்கப்படும்; குலுக்கல் முறையில் பரிசும் அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது

*லோக்சபா தேர்தல் நடக்கும் சந்தர்ப்பத்தில், கோடை விடுமுறை உள்ளதால், பலரும் சுற்றுலா அல்லது சொந்த ஊருக்கு செல்வர்

*இதனால் ஓட்டு சதவீதம் குறையும்.எனவே, மாணவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவர்கள் ஓட்டு போட்டால், பிள்ளைகளுக்கு நான்கு மதிப்பெண் வழங்கப்படும் என, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, இந்த வித்தியாசமான திட்டத்தை அறிவித்து உள்ளது

*கர்நாடக மாநில தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முதன்மை செயலர், சசிகுமார் அளித்த பேட்டி:தாய், தந்தை இருவரும் ஓட்டு போட்டால், அவர்களின் பிள்ளைகளுக்கு பள்ளி தேர்வில் நான்கு மதிப்பெண் வழங்கப்படும். மாணவர்கள் பெறும் மொத்த மதிப்பெண்களுடன், நான்குகூடுதல் மதிப்பெண் சேர்க்கப்படும்

*பெற்றோர் ஓட்டுப்போட்டதை, ஓட்டுச்சாவடியில் வழங்கப்படும் ஒப்புகை சீட்டுடன், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று தெரிவிக்க வேண்டும். அனைத்து வகுப்புகளுக்கும் இது பொருந்தும்.தேர்தலுக்கு பின், தேர்வு முடிவு வெளியானால், கூடுதல் மதிப்பெண் தரப்படும்

*ஒருவேளை தேர்தலுக்கு முன்பே, தேர்வு முடிவு வெளியானால், அடுத்த கல்வியாண்டில் நான்கு மதிப்பெண் பெறலாம்.கூடுதல் மதிப்பெண் தருவதுடன்,ஓட்டு போடும் பெற்றோரின் பெயரை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து சிறப்பு பரிசும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. ஆதார் கூட வாக்காளர் அடையாள அட்டையை இணைங்கடா முதல்ல....அப்புறம் எல்லாம் ஓட்டு போடுவாங்க......அதுக்கு துப்பு இல்ல.......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி