அஞ்சல் துறையில் 4442 காலியிடங்கள்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2019

அஞ்சல் துறையில் 4442 காலியிடங்கள்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 4443 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 15 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிளை அஞ்சல் அதிகாரி, உதவி கிளை அஞ்சல் அதிகாரி மற்றும் தபால்காரர் உள்ளிட்ட பதவிகளுக்கான 4442 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்தப் பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், இப்பணிக்கு இணையதளம் மூலம் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அஞ்சலக இணையதள சர்வர் மார்ச் 28 ஆம் தேதி முதல் முடங்கியதாகவும், இதனால் பணியிடங்களுக்காக  விண்ணப்பிப்பது பாதிக்கப்பட்டுள்ளதாக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகங்களில் உள்ள அஞ்சலக தலைமை அதிகாரிகளை தொடர்பு கொண்டும் விண்ணப்பிப்போர் புகார் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, தற்போது தேர்தல் நேரமாக இருப்பதால் இந்த சர்வர் முடக்கத்தை சீர்செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை என கூறப்பட்டது. இதுகுறித்து சமூக ஊடகங்களிலிலும், நாளிதழ்களும் செய்திகள் வெளியிட்டிருந்தன.

இதையடுத்து சர்வர் முடக்கத்தை சீர்செய்ய வேண்டும் எனவும், விண்ணப்பிக்கும் காலகெடு தேதியை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, 4442 பணியிடங்களுக்கு வரும் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 4442
பணியிடம்: தமிழ்நாடு

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Branch Postmaster (BPM)
சம்பளம்: மாதம் ரூ.12,000 - 29,380

பணி: Assistant Branch Postmaster (ABPM)
சம்பளம்: மாதம் ரூ.ரூ.10,000 - 24,470

பணி: Dak Sevak
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 24,470

வயதுவரம்பு: 15.03.2019 தேதியின்படி 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். உள்ளூர் மொழிகள் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://appost.in/gdsonline மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tamilnadupost.nic.in https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/3/12/Tamilnadu-19-1.pdf என்ற லிங்கிள் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2019

இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடைய வாழ்த்துக்கள். 

3 comments:

  1. Last date registration is 18.4.2019. Submit date only 28.4.2019

    ReplyDelete
  2. Sir apply pannum pothu obc select pannitu mbc community upload pannita reject aaiduma?
    Pls any body tell me..

    ReplyDelete
  3. Sir mbc community upload panna reject aaiduma?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி