தபால் வாக்குச்சீட்டுகள் 70% பேருக்கு கிடைக்கவில்லை: ஜாக்டோ ஜியோ புகார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2019

தபால் வாக்குச்சீட்டுகள் 70% பேருக்கு கிடைக்கவில்லை: ஜாக்டோ ஜியோ புகார்


திருவண்ணாமலை மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 70 சதவீதம் பேருக்கு தபால் வாக்குச்சீட்டு கிடைக்கவில்லை என ஜாக்டோ ஜியோ சார்பில் நேற்று கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் 11,515 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 7ம் தேதி 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் நடந்த பயிற்சி வகுப்பின்போது, தபால் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பெரும்பாலான அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படவில்லை. படிவம் 12 மற்றும் 12ஏ ஆகியவற்றை முறையாக பூர்த்தி செய்து, வாக்காளர் அடையாள அட்டை நகலை இணைத்து அளித்தும், வாக்குசசீட்டுகள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். தொகுதி மாறி சென்று விட்டது, சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் நேரில் பெற்றுக்கொள்ளுங்கள் என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளித்தனர். அதன்படி, தாலுகா அலுவலகங்களிலும் கடந்த 2 நாட்களாக தபால் வாக்குச்சீட்டுகள் வழங்கவில்லை.
இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

அதில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களில் 70 சதவீதம் பேருக்கு இதுவரை தபால் சீட்டுகள் வழங்கவில்லை. அதனை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுடைய தபால் வாக்குச்சீட்டுகள் தவறாக பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.  எனவே, அனைத்து அலுவலர்களுக்கும் தபால் வாக்குச்சீட்டுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வரும் 13ம் தேதி நடைபெறும் 3வது கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புக்குள், தபால் வாக்குச்சீட்டுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி