Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

நாடு முழுவதும் 759 பேர் தேர்ச்சி: சிவில் சர்வீசஸ் பணிக்கான இறுதி தேர்வு முடிவு வெளியீடு


சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 759 பேர் தேர்வு ஆகியுள்ளனர். இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 30 பேர் இடம்பெற்றுள்ளனர்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 26 வகையான பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசுபணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது

இந்த பணிகளுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய 3 கட்டங்களாக தேர்வு நடைபெறும். அந்த வகையில் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு 812 காலி இடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்று தேர்வு முடிவு ஜூலையில் வெளியானது. இதில் நாடு முழுவதும் 9 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் 432 பேர் தேர்வாகினர்

முடிவு வெளியீடு**அதை தொடர்ந்து முதன்மை தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கி அக்டோபர் 7-ந்தேதி வரை நடந்தது.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு பிப்ரவரி 12-ந்தேதி தொடங்கி மார்ச் 29-ந்தேதி வரை டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் இறுதி தேர்வு முடிவை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. இதில் நாடு முழுவதும் 759 பேர் தேர்ச்சி பெற்று தேர்வாகியுள்ளனர்

பொதுப்பிரிவில் 361 பேரும், இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பிரிவில் 209 பேரும், எஸ்.சி. பிரிவில் 128 பேரும், எஸ்.டி. பிரிவில் 61 பேரும் தேர்வு பெற்றுள்ளனர். இவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். மற்றும் மத்திய அரசு பணிகளில் குரூப்-ஏ, குரூப்-பி உள்ளிட்ட பதவிகளில் அமர உள்ளனர்.

மனிதநேய மையம்**இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 30 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives