கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விண்ணப்பப் பதிவு தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2019

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்


தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் 1,199 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 14 பள்ளிகள் உள்பட  தமிழகத்தில் மட்டும் 48 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை, கே.வி.சங்கதன் என்ற கேந்திரிய வித்யாலய ஆணையரகம் மூலமாக ஆன்லைனில் நடத்தப்படுகிறது.இந்தப் பள்ளிகளில், எல்.கே.ஜி., யு.கே.ஜி. போன்ற மழலையர் வகுப்புகள் கிடையாது. ஒன்றாம் வகுப்பில்தான் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

நிகழாண்டு ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த 19-ஆம் தேதி நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து, இரண்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த  2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்தப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கவிரும்பும் பெற்றோர் kvsonlineadmission.in  என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 9 ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு மாணவர்கள் குறித்த விவரங்கள் ஏப்ரல் 12-ஆம் தேதிவெளியிடப்படும். அதன் பிறகு அந்த மாணவர்களுக்கானசேர்க்கை தொடங்கப்படும். ஏப்.30 வரை சேர்க்கை நடைபெறும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி