ஆதார் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு சட்டத்திற்கு விரோதமானது - ஆசிரியை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2019

ஆதார் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு சட்டத்திற்கு விரோதமானது - ஆசிரியை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!


ஆசிரியர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கு எதிரான வழக்கில், அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.
   
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறையை அறிமுகம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை ரத்துசெய்யக் கோரிய மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, ஆதார் அடிப்படையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அறிமுகம் செய்து, 2018 அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்துசெய்யக் கோரி, நாகர்கோவிலைச் சேர்ந்த அன்னல் என்ற அரசுப் பள்ளி ஆசிரியை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறவும், மானிய உதவிகளைப் பெறவும் மட்டும் ஆதாரை பயன்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சட்டத்திலும் இந்த விதிகள் உள்ளன. இதை மீறி, வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. அடிப்படை உரிமையான அந்தரங்க உரிமையை மீறிய செயல் என்று ஆசிரியை அன்னல் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

  1. olukkama velaiku poga mudiyalla late ah poraku vali illa itha konduvandhuta so case

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி