தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பால் அரசு பள்ளிகளுக்கு படையெடுக்கும் பெற்றோர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2019

தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பால் அரசு பள்ளிகளுக்கு படையெடுக்கும் பெற்றோர்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதால், தங்கள் பிள்ளைகளை சேர்க்க, அரசு பள்ளிகளை நோக்கி, பெற்றோர் படையெடுக்க துவங்கி உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 109 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 74 தனியார் பள்ளிகளும் உள்ளன. கடந்த காலங்களில், தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டினர்.

தனியார் பள்ளியில் படித்தால், ஆங்கில அறிவு மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என, பெற்றோர் நம்பினர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக, மாவட்டத்தில் அரசு பள்ளிகளிலும் ஆங்கிலவழியில் பயிற்றுவிக்கப் படுகிறது. இதற்காக, அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு, தனியாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் விளைவாக, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தனியார் பள்ளிக்கு நிகராக மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் வெளியான, பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், ஏழு அரசு பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 40 பள்ளிகள், 90 சதவீதமும், மற்றவை, 60 சதவீத்துக்கு மேலும் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர், தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு நிகராக, அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இதைடுத்து, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில் தங்கள் குழந்தைகளை தங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்க, பெற்றோர் முடிவு செய்து, முன்கூட்டியே ஆசிரியர்களிடம் சொல்லி வைத்துள்ளனர். இதனால், இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பில், அரசு பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

1 comment:

  1. ஊடகமும் அரசியல்வாதிகளும் விடமாட்டாங்களே. பார்ப்போம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி