பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி: மதிப்பீட்டு முகாமுக்கு இன்று விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 6, 2019

பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி: மதிப்பீட்டு முகாமுக்கு இன்று விடுமுறை


மேல்நிலை,  இடைநிலை வகுப்புகளுக்கான விடைத் தாள்கள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மதிப்பீட்டு முகாமுக்கு விடுமுறைஎன்பதால் சனிக்கிழமை நடைபெறாது என தேர்வுத் துறைஇயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி அந்தந்த கல்வி மாவட்ட அளவில் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் அறிவித்த நிலையில் ஓட்டுப் பதிவு நாளான ஏப்.18 க்கு மறுநாளே (ஏப். 19) பிளஸ்2 தேர்வு முடிவை அறிவிக்க தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஆசிரியர்களுக்கு காலை, மாலை 24 விடைத்தாள்கள் வீதம் வழங்கப்பட்டு, துரிதமாக திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ஆசிரியருக்கு தலா ரூ.10 வீதம் ஊக்கத் தொகை வழங்குகின்றனர். தேர்தலுக்கு மறுநாள் பிளஸ் 2 தேர்வு முடிவை அறிவிக்கும் விதமாக ஏப். 9- க்குள் விடைத் தாள்களை திருத்தி, இறுதி அறிக்கை தயாரித்து அனுப்ப முதன்மைக் கல்விஅலுவலர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும், பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியையும் விரைந்து முடிப்பதற்காக அரசு விடுமுறை நாளான சனிக்கிழமை (ஏப். 6) தெலுங்கு வருட பிறப்புக்கான அரசு விடுமுறையை ரத்து செய்திருந்தது. அன்றைய தினம் ஆசிரியர்கள் வழக்கம் போல் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில்,  வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாளிலும் விடைத்தாள்களை திருத்தும் பணியை ஓய்வு இல்லாமல் செய்வதால் மனஉளைச்சலாக உள்ளது;  வேலைப்பளுவால் சிரமப்படுகிறோம்.  எனவே தெலுங்கு வருடப் பிறப்பு நாளிலாவது ஓய்வு தரவேண்டும் என வலியுறுத்தினர்.  இந்த நிலையில் மேல்நிலை,  இடைநிலை வகுப்புகளுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் சனிக்கிழமை நடைபெறாது என தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி