புதுக்கோட்டை தைலாநகர் பள்ளியில் கல்விச்சீர் மற்றும் கல்வி கண்காட்சி விழா. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2019

புதுக்கோட்டை தைலாநகர் பள்ளியில் கல்விச்சீர் மற்றும் கல்வி கண்காட்சி விழா.



ஏப்.4: புதுக்கோட்டை ஒன்றியம் தைலாநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச் சீர் மற்றும் கல்விக் கண்காட்சி நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளித் தலைமையாசிரியர் உஷாராணி வரவேற்றுப் பேசினார்.புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.ராகவன் கொண்டு கண்காட்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டு வாழ்த்திப் பேசினார்.ஆசிரியர் மன்ற மாநில துணைச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன்,வட்டாரக்கல்வி அலுவலர் கருணாகரன்,வட்டாரவளமைய மேற்பார்வையாளர் தேவி,வட்டார வள மைய பயிற்றுநர் ரெங்கராஜன் ,முன்னாள் ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர் கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் ஊர்ப்பொதுமக்கள் அனைவரும்  எல்.இ.டிவி,பீரோ,நாற்காலி,மைக்,கேரம்போர்டு,சேர் என பல்வேறு பள்ளிக்கு தேவையான பொருள்களை பள்ளிக்கு கல்விச் சீராக கொண்டு வந்தனர்.அதனை பள்ளித் தலைமைஆசிரியர் உஷாராணி பெற்றுக்கொண்டார்.பின்னர் மாணவர்கள் சார்பில் பள்ளியில் நடத்தப்பட்ட கல்விக் கண்காட்சியினை ஊர்ப்பொதுமக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பார்வையிட்டு மாணவர்களை வாழ்த்திச் சென்றனர்.

விழாவில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வராஜன்,செல்வராசு, முன்னாள் ஊராட்சித் தலைவர் அசோக் பாண்டியன் மற்றும் கோமதி சங்கர் ,மதியழகன்,அழகுசுந்தரம்,நூர்முகம்மது,ஆறுமுகம்,சந்திரன்,நைனாமுகம்மது மற்றும் ஆசிரியர்மன்ற பொறுப்பாளர் வெங்கடேசன் ஊர்ப்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மைதிலி,ஞானம்பாள்,சம்பூரணம்,லதா,ஜெயகலா,மதுசூதனன் ஆகியோர் செய்திருந்தனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி