ஜாக்டோ- ஜியோ ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2019

ஜாக்டோ- ஜியோ ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்


ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை அச்சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்:

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ள வேண்டும்.கல்லூரி ஆசிரியரின் பணிநிலைப் பிரச்னைகளுக்குத்தீர்வு காண  கல்லூரிக் கல்வி இயக்குநர் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இரண்டு தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவ தமிழக அரசு வழங்கியுள்ள அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும். ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை 1.1.2019 தேதியிட்டு உடனே வழங்க வேண்டும்.

தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் குறிப்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், மறுமதிப்பீட்டுக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்தக் கட்டண உயர்வை மாணவர்கள் நலன் கருதி திரும்பப் பெற வேண்டும். மூன்று அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் 10 அரசுப் பொறியியல் கல்லூரிகள் உள்பட அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி ஊதியத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக, 2019-2021 ஆம் ஆண்டுகளுக்கான மையப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் மாநிலத் தலைவராக ஈரோடு கலை அறிவியல் கல்லூரியின்மின்னணுவியல் துறை இணைப் பேராசிரியர் என்.பசுபதி, பொதுச் செயலாளராக திருச்சி தேசியக் கல்லூரியின் ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் எம்.எஸ்.பாலமுருகன், பொருளாளராக சென்னை பச்சையப்பன் கல்லூரியின் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் பா.இளங்கோவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி