கூகுள் ப்ளஸ் சமூக வலைதள சேவை நிறுத்தம் - கூகுள் நிறுவனம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2019

கூகுள் ப்ளஸ் சமூக வலைதள சேவை நிறுத்தம் - கூகுள் நிறுவனம் அறிவிப்பு.


கூகுள் ப்ளஸ் சமூக வலைதள சேவையை கூகுள் நிறுவனம் நிறுத்திக்கொண்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவையை கூகுள் தொடங்கியது. பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில்  வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூ ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில்  அதிகம் ஆர்வம் காட்டாத பயனாளர்கள் பின்னர் கூகுள் ப்ளஸை பயன்படுத்த தொடங்கினர். ஆனால் சமூக வலைதளங்களின் ராஜாவாக இருக்கும் பேஸ்புக், ட்விட்டர் ஆகியவவைகளுக்கு கூகுள் ப்ளஸ் கடும் சவாலாக இருக்கும்  என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  பேஸ்புக், ட்விட்டர் ஆகியவவைகளுக்கு கூகுள் ப்ளஸூல் நேரடி போட்டி கொடுக்க முடியவில்லை.

இதற்கிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகம் ஒன்றில் சுமார் 5 லட்சம் பேர்களின் தனிப்பட்ட தகவல்கள் கூகுள் ப்ளஸ் மூலம் திருடப்படுவதாக செய்தி வெளியானது. தொடர்ந்து சுமார் 438 வேறு செயலிகளில் இருந்து  பயணாளிகளின் பெயர், இ-மெயில் முகவரி, பாலினம், பணி செய்யும் முகவரி உள்ளிட்டவை திருடப்பட்டது இணைய உலகில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் மாதத்திலேயே இந்த பிரச்னை தெரிய வந்தாலும்  அப்போது கூகுள் நிறுவனம் இது குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால், தகவல் திருட்டு காரணமாக கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் மூடப்படும் என்றும் 10 மாதங்களுக்குள்  பயனாளர்கள் தங்களின் தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் முடக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி