கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) - மாணவர் அடையாள அட்டை தயாரித்தல் - வழிகாட்டுதல்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2019

கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) - மாணவர் அடையாள அட்டை தயாரித்தல் - வழிகாட்டுதல்கள்


கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)- மாணவர் அடையாள அட்டை தயாரித்தல்  -வழிகாட்டுதல்கள்

 இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இயக்குனரின் செயல்முறைக்கடித்தில் கண்டுள்ள  வழிகாட்டுதல்களின்படி, செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 🔴 மேலும் வரும் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறும் என அறியப்படுவதால் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ள 9 இனங்களை அந்தந்த வகுப்பாசிரியர்கள் அவர்களின் வகுப்பு மாணவர்களின் விவரம் சரியாக உள்ளது என்பதை பள்ளியிலுள்ள ஆவணங்கள் கொண்டு உறுதி செய்ய வேண்டும்.

🔴 தவறுகளை சரி செய்து, சரியானதை  உள்ளீடு செய்ய வகுப்பு ஆசிரியர் களுக்கு அறிவுறுத்தி, இப்பணியை 08.04.2019 க்குள் முடித்திட, அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 🔴 தற்போது Emis இணையதளத்தில் மாணவர்களின் பெயருக்கு எதிரே edit என்ற புதிய Button கொடுக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஒன்பது இனங்களை மிகச் சுலபமாக திருத்த முடியும்.

🔴🔴 மாணவரின் விவரங்களை மாற்ற / திருத்த வேண்டிய இடம்

Student  profile

📍மாணவர் பெயர் தமிழில்
📍மாணவர் பெயர் ஆங்கிலத்தில்
📍பெற்றோர் பெயர் ஆங்கிலத்தில்
📍பிறந்த தேதி
📍ரத்த வகை
📍தொடர்பு எண்
📍வீட்டு முகவரி
📍புகைப்படம் ..

🔴🔴 பள்ளி முகவரி மாற்ற / திருத்த வேண்டிய இடம்

School profile

🔴 புகைப்படங்கள்  பொறுத்தமட்டில் ஏற்கனவே இருப்பவை மாற்றவும் புதியவற்றை சேர்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 🔴 மேற்கண்ட இனங்களை போல் Emis இணையதளத்தில் உள்ள உங்கள் பள்ளி சார்ந்த அனைத்து தகவல்களும் மிகச்சரியாக இருத்தல் வேண்டும்.
ஏனெனில் , வரும் கல்வி ஆண்டுமுதல் EMIS தளத்தில் இருந்துதான் அரசின் அனைத்து

🔴 பள்ளி சார் பதிவேடுகளின் பதிவுகள்  மற்றும் நடவடிக்கைகள்

 🔴 மாணவர்களின் நலத்திட்டங்கள்

🔴 ஆசிரியர் பணியிடங்கள் வருவித்தல் மற்றும்
உபரி பணியிடங்கள் கணக்கிடுதல்

 சார்ந்த அனைத்து விவரங்களும்   தொகுக்கப்பட உள்ளன.

 🔴 இவ்வினங்களில்  ஏதேனும் பிழைகள் அல்லது தவறுகள் இருப்பின் தற்போதே அனைத்தையும் சரி செய்து கொள்ள வேண்டும்.
(  திருத்தம் குறித்த வீடியோ முன்னதாக அனுப்பப்பட்டுள்ளது)

🔴 பிழைகள் திருத்தப்படவில்லை என்றால்,  சார்ந்த   பள்ளியே அதற்கு பொறுப்பாகும். 

🔴 தொழில்நுட்ப விவரங்கள் சார்ந்த ஐயங்களுக்கு வட்டார அளவிளான EMIS குழுவை அணுகி தீர்வு பெறலாம்.

🔴 மாணவர் அடையாள அட்டை சார்ந்த விவரங்கள் நூறு சதவீதம் பிழையின்றி  அச்சிடப்பட வேண்டும் என்பதால்,  விவரங்களை ஆவணங்கள் அடிப்படையில் சரிபார்த்து திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறது.

 இதுவே திருத்தங்கள் செய்ய இறுதி வாய்ப்பு

ID card corrections urgent
 ( before 08.04.2019)

Emis over all correction compulsory 
( before 08.04.2019)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி