EMIS - தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 6, 2019

EMIS - தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம்.


இணையதளத்தில், மாணவர்களின் விபரம் பதிவு செய்வதுகுறித்து, தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம்நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 2.50 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களை பற்றிய விபரம், 'எமிஸ்' என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பதிவுகளை சரிபார்த்து, அதிலுள்ள தவறுகளை சரிசெய்வதற்கு, அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது.

முதன்மை கல்வி அதிகாரி உஷா பேசுகையில், ''மாணவரின் புகைப்படம் தெளிவாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.பெற்றோரின் தொடர்பு எண், மாணவரின் பிறந்த தேதி, முகவரி, ரத்த வகை போன்றவற்றை சரிபார்த்து உள்ளீடு செய்ய வேண்டும். இணையதள பதிவை சரிபார்த்து, வரும், 8க்குள் அவற்றில் தவறுகள் இருந்தால் சரி செய்ய வேண்டும்,''என்றார். மாவட்ட கல்வி அலுவலர் ஷேக் உசேன், முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

1 comment:

  1. முதுகலை தமிழாசிரியர் பணிக்காக "Test batch with discussion "
    சங்கத்தமிழ் பயிற்சி மையம் தருமபுரி

    15 வாரங்கள்
    45 தேர்வுகள்
    தேர்வுக்கு 150 வினாக்கள்
    கட்டணம் : 8000
    தொடர்புக்கு
    பேரா. டாக்டர் கதிர்முருகு
    8220820253

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி