Flash News : TNTET - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து புதிய அறிவிப்பு வெளியிடக்கோரி வழக்கு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2019

Flash News : TNTET - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து புதிய அறிவிப்பு வெளியிடக்கோரி வழக்கு!


ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து புதிய அறிவிப்பு வெளியிடக்கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியிட்டது. அதில் எஸ்சி, எஸ்டி வகுப்பை சேர்ந்தவர்கள் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் கல்வியியல் பட்டத்தை பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனை எதிர்த்து புதுக்கோட்டையை சேர்ந்த தேவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் விதிப்படி, எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று, கல்வியியல் பட்டம் பெற்றிருந்தால் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் கல்வியில் பட்டத்தை பெற்றவர்களே ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுத இயலும் என கூறப்பட்டுள்ளது. இதனால் எஸ்சி, எஸ்டி வகுப்பை சேர்ந்த பலர் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத இயலாத நிலை உருவாகியுள்ளது.

எனவே பிப்ரவரி 28ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து, எஸ்சி, எஸ்டி வகுப்பினர் குறைந்தபட்சம் பட்டப்படிப்பில் 40 சதவீத மதிப்பெண்களுடன் கல்வியில் பட்டத்தை பெற்றிருந்தால் ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதலாம் என புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். 

44 comments:

  1. Replies
    1. yaravathu case poduvanga..so atha vachu tet related a ulla calfor posting a case vachu iluthadikalam ngra munkutiya trb in plan nu thonuthu.. election la admk+ a veetuku anupinathan elam nalapadiya nadakum ngratha elarum unanthutanga..

      Delete
    2. yaravathu case poduvanga..so atha vachu tet related a ulla calfor posting a case vachu iluthadikalam ngra munkutiya trb in plan nu thonuthu.. election la admk+ a veetuku anupinathan elam nalapadiya nadakum ngratha elarum unanthutanga..govt college la 540 guest lecturers muraiyana arivipu papers la vidamalayea fill panitanga..nera college la keta engalukea puriyala theriyala ivungala yaru appoint panunanganu solranga..so govt college GL kea ipadina regular postingku ena panamatanga..so unmaiya ulachu padichavanga padikiravangaluku ngayama job ella rights m kidaikanumna admk+ intha elaction oda nirantharama veetuku anupunga anupunga anupunga..

      Delete
  2. ஆரம்பிச்சிடீங்களாட....

    ReplyDelete
  3. Exam eluthana piraguthan case varum but notification la case. Super trb.

    ReplyDelete
  4. Pongada
    .... Summa ungaluku posting kuduka sollugada

    ReplyDelete
  5. டெட் என்பது நம்ம நாட்டுல நடத்துரதுக்குள்ள ஏகப்பட்ட பிரச்சனைகள்...

    ReplyDelete
    Replies
    1. correction nama naatula ila nama tamil natula intha admk+ govt la..matra states west bengal aanthra kerala muraiya calfor vitu muraiya posting padathan seiranga..keduketathanam intha tamil natulathan..ithuku yaru ethu kaaranam nu itha theerka election la makal ena seiyanumnu mudivupanitanga..

      Delete
  6. sc,st mattum ella govt jobla utkaratum,matravangalam___ padikkanum

    ReplyDelete
  7. ஆசிரியர் தேர்வு வாரியம் நினைத்ததை சாதித்து விட்டது.

    ReplyDelete
  8. ஆசிரியர் தேர்வு வாரியம் நினைத்ததை சாதித்து விட்டது.

    ReplyDelete
  9. sc,st mattum place othikkedu,govt job ella salugaium undu,but matra category waste, mark basicil than ella selection nadakkanum

    ReplyDelete
    Replies
    1. Appo BCM GT GTW BCW kottala canditate appoiment ahuranga...adhu enna list sir

      Delete
    2. Vayitherichal party. .. intha ennam vachuruntha unaku job a kidaikathu.. mind it. Only 19% job mattum thaan sc, st ku... 50%mbc bc ku iruku athq patthi pesatha.... moodilitu padikira velaiya paaru

      Delete
  10. sc st govt job kudukkakudathu

    ReplyDelete
  11. Ini indha govt oda aattatha paakkadhana poringa

    ReplyDelete
  12. Admk il nithi patrakurai.. nama nithi kodukrom..
    100000 laks application sales anichna evlo varumanam..think nanbargale..

    ReplyDelete
  13. சிறப்பு மிக சிறப்பு

    ReplyDelete
  14. Ini indha xam m nadantha mari dan... good trb good govrtmt...kep t up

    ReplyDelete
  15. Bed common thana na vara degree pantra irukava irku history geography Tamil + annamali university m......

    ReplyDelete
  16. இது மாதிரியான அறிவிப்பை வெளியிட்டால்தான் பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு போடுவார்கள்.வழக்கை காரணம் காட்டி ஒரு வருடமோ,இரண்டு வருடமோ தள்ளிப்போடலாம் என்பது அரசின் கறிக்கோளாக இருக்கலாம்.யாரைப்பற்றியும் கமாண்ட்சில் விமர்சிக்க வேண்டாம்.எய்தவன் இருக்க அம்பை நோவானேன்!

    ReplyDelete
  17. இப்படி அறிவிப்பு செய்தால்தான் பாதிக்கப்படுபவர்கள் வழக்கு போடுவார்கள்.இதையே காரணம்காட்டி இன்னும் இரண்டு ஆண்டு தள்ளிவிடலாம்.எய்தவன் இருக்க அம்பை நோவானென்!

    ReplyDelete
  18. B.Ed படித்தவர்பளை டிஆர்பி தலைவராக நியமிக்கவும் கல்வி துரையில் கிலர்க்கு முதல் தலைவர் அமைச்சர் வரை அனைவரும் பிஎட் படத்து இருக்கனும்

    ReplyDelete
  19. போட்ட திட்டம் சரியா எது எதுக்கு வய்ப்பு இருக்கு என்று பார்காமல் அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு எதும் தெரியாது என்று நாங்கள் கூறுவது சரி என்று கூறுகிறார்கள்

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. ஒரு நல்ல தீர்வு கிடைத்து அனைவரும் இந்த ஆண்டு TET தேர்வை எழுத வேண்டும்

    ReplyDelete
  22. Illathavanga othukki vaikiringa ithula yen poti poduringa

    ReplyDelete
  23. O k no exam this year super thank u for all

    ReplyDelete
  24. O k no exam this year super thank u for all

    ReplyDelete
  25. Age limit 40ku Mel Tet exam elutha mudiyatha?

    ReplyDelete
  26. Age limit 40ku Mel Tet exam elutha mudiyatha?

    ReplyDelete
  27. Age limit 40ku Mel Tet exam elutha mudiyatha

    ReplyDelete
  28. Age limit 40ku Mel Tet exam yelutha mudiyatha

    ReplyDelete
  29. Age limit 40ku Mel Tet exam yelutha mudiyatha

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி