NEET 2019 Exam - Important Dates [ Exam Date - May 5 , Hall Ticket Download Date - April 15 , Result Date : June 5 ] - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2019

NEET 2019 Exam - Important Dates [ Exam Date - May 5 , Hall Ticket Download Date - April 15 , Result Date : June 5 ]


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் ஹால்டிக்கெட்டை வரும் 15-ம்தேதி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2019-20 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்), வரும் மே 5-ம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தும் நீட் தேர்வுக்கு கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதற்கிடையே, 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம்கடந்த வாரம் உத்தரவிட்டது. இதையடுத்து நீட்தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. நாடு முழுவதும் இருந்து நீட் தேர்வுக்கு 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

ஜுன் 5-ல் தேர்வு முடிவு

இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை வரும் 15-ம் தேதி www.nta.ac.in / www.ntaneet.nic.in இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி,தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாம், வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி