TRB - புதிய விதிமுறையால் இந்த ஆண்டு டெட் தேர்வு எழுத காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பாதிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2019

TRB - புதிய விதிமுறையால் இந்த ஆண்டு டெட் தேர்வு எழுத காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பாதிப்பு!


பட்டப்படிப்பில் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே இனி டெட் தேர்வை எழுத முடியும் என்ற ஆசிரியர் தேர்வாணைய அறிவிப்பால் பல்லாயிரக்கணக்கான வேலையில்லா ஆசிரியர்கள் பரிதவிப்புக்கு  ஆளாகியுள்ளனர்.

கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ல் தொடங்கி இதுவரை நான்கு முறை டெட் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளில் பி.எட்  தேர்ச்சி பெற்றிருந்தாலே டெட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தது.

 இதற்காக இளங்கலைப்பட்டம் மற்றும் பி.எட் பட்டப்படிப்புகளில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில், 2019 டெட் தேர்வுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பதிவு நடந்து வருகிறது. ஆனால், இந்த முறை டெட் தேர்வில் 2ம் தாளுக்கு விண்ணப்பிக்க  இளங்கலைப்பட்டப்படிப்பில் இதர பிரிவினர் 50 சதவீதமும், இதர பிசி, எம்பிசி, எஸ்சி.,எஸ்டி என இடஒதுக்கீட்டுப்பிரிவினர்கள் அனைவரும் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம்  விதிமுறைகளை வகுத்துள்ளது.

இந்த புதிய விதிமுறையால் இந்த ஆண்டு டெட் தேர்வு எழுத காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இது சமூக நீதிக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது. ஆசிரியர் தேர்வாணைய  முடிவின் மூலம் பி.எட் பட்டப்படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் 43 முதல் 44 சதவீதம் வரை இளங்கலைப்பட்டப்படிப்பில் மதிப்பெண் பெற்ற பிசி, எம்பிசி மாணவர்களும், 40 முதல் 44 சதவீதம் வரை பெற்ற எஸ்சி., எஸ்டி பிரிவு மாணவர்களும் டெட் தேர்வு எழுத முடியாத நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இம்முடிவை ஆசிரியர் தேர்வாணையம் திரும்ப பெற வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

25 comments:

  1. Sir pls consider us time is going

    ReplyDelete
  2. B.lit +Tamil pandit training Tet 2019ku eligible or not eligible pls admin sir reply,

    ReplyDelete
    Replies
    1. Sir please apply for that post iam passed in 2013

      Delete
  3. இன்னும் தெரியவில்லை

    ReplyDelete
  4. Please allow all the passed candidates to write the TET exam ...

    ReplyDelete
  5. D.Ted., with PG (without B.Ed.,) Can I write
    Paper 2 ? As per TET Notification 2019. Please reply me

    ReplyDelete
  6. UG la 45% mark iruntha thana B.ed ku apply panna mudium??? Apram yepdi 45% ku below irukavanga BEd pananga???

    ReplyDelete
  7. UG la 45% mark iruntha thana B.ed ku apply panna mudium??? Apram yepdi 45% ku below irukavanga BEd pananga???

    ReplyDelete
  8. How to calculate % in degree. Add part 1 mark or not

    ReplyDelete
  9. How to calculate % in ug add part 1 mark or not

    ReplyDelete
  10. Ugpresentage illana ena pg vitchu pantulama

    ReplyDelete
  11. Ugla illanu than pg Vichy pantunom ippa ena pantrathunu sami mutila

    ReplyDelete
  12. ஆசிரியர் தேர்வு அனைத்தும் குழப்பம்...

    ReplyDelete
  13. Illana vetuba nan open university LA vara degree patekra apram ena pantuvenka

    ReplyDelete
  14. Illana vetuba nan open university LA vara degree patekra apram ena pantuvenka

    ReplyDelete
  15. Illana vetuba nan open university LA vara degree patekra apram ena pantuvenka

    ReplyDelete
  16. ஒரு தெளிவான விதிமுறைகள் வகுக்க வேண்டும்.. இல்லை எனில் இது போன்ற பிரச்சினை வரும்

    ReplyDelete
  17. B.sc. Mathematics with B. Ed முடித்தவர்கள் TET தேர்வில் social science பாடத்தை optional ஆக தேர்வு செய்யலாமா? .pls anybody reply

    ReplyDelete
  18. Sir I have passed in 2013 tet. Is it compulsory I have to attend this exam.I can directly attend the second exam sir.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி